கைதுசெய்யப்பட்ட மே 17 இயக்கத்தவர்களின் விடுதலையை கோரி மீண்டும் லண்டனில் போராட்டம்.

மீண்டும் பிரித்தானியாவில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முன் மக்கள் போராட்டம் இன்று (09.07.2017 ) நடைபெட்ட்றது. குண்டாஸ் சட்டத்தில்  கைதுசெய்யப்பட்ட திருமுருகன் காந்தி மற்றும் சக தோழர்களின்  விடுதலையை கோரி இந்த போராட்டத்தை தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஏற்பாடு செய்திருந்தது. இதில் தமிழ் இளையோர் அமைப்பு மற்றும்  தமிழ் சொலிடரிட்டி அமைப்பு கலந்து கொண்டிருந்தது.

போராடுவது எங்கள் உரிமை ‘ என்னும் தொனிப்பொருளில் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி உட்பட்ட கைது செய்யப்பட்ட தோழர்களை விடுதலை செய்யுமாறும், மோடி மற்றும் ஒன்றிய அரசாங்களின் மாநிலங்கள் மீதான அடக்குமுறையையும் எதிர்த்து லண்டனில் உள்ள இந்திய உயரஸ்தானியர் அலுவலகத்திற்கு முன்பாக 19 – 06 – 2017 அன்று ஒரு  ஆர்ப்பாட்டத்தை தமிழ் சொலிடரிட்டி அமைப்பு ஒழுங்கு செய்திருந்தது.

அரசியல் கைதிகளை விடுதலை செய், குண்டாஸ் சட்டத்தை நீக்கு, பேச்சுரிமையை நசுக்காதே , போராடுவது எமது உரிமை , ஒன்றிய , மாநில அரசே அரசியல் குரல்களை ஒடுக்கதே போன்ற கோஷங்களை போராட்டக்காரர்கள் முன்வைத்தார்கள்.

இதில் பலரும் கலந்து கொண்டு தம் ஆதரவை இந்த போராட்டத்திற்கு வழங்கி இருந்தனர்.

[robo-gallery id=”2211″]