லண்டனில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முன் 09.09.17 அன்று 11:00 மணியளவில் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் NEET இனை தடை செய்ய கோரியும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
இந்த ஆர்பாட்டத்தில் வீரத்தமிழர் முன்னணி தமிழ் சொலிடாரிட்டி , விடுதலைக்கான குரல் – பறை மற்றும் அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் – லண்டன் ஆகிய அமைபுக்கள் கலந்து கொண்டன. NEET என்பது ஒடுக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் கல்வி மீது தொடுக்கப்பட்ட வன்முறையே என்பது அனைவரதும் கருத்தும் உணர்வுமாய் இருந்தது.
அனிதாவின் மரணம் தற்கொலையே அல்ல இந்த சமூகம் மீது அவள் கொண்ட கோபமேயாகும். அதை கருத்தில் கொண்டு அம்மாணவர்களின் கல்வி நிலை மேலோங்க NEET உதவாது என்றும் அதை தடை செய்தே ஆக வேண்டும் என்பதுமே கோரிக்கையாக வைக்கப்பட்டது.
மத்திய , மாநில அரசுகளுக்கு எதிரான பதாகைகளும் இந்துவா சக்திகளை ஒழிப்போம் போன்ற கோஷங்களும் முன்வைக்குப்பட்டன. அண்மையில் சுட்டு கொல்லப்பட்ட ஊடகவியலாளர் கௌரி லங்கேஷ் தொடர்பான பாதகைகள் நசுக்கப்படும் கருத்து சுதந்திரம் என்ற வாசகங்களுடன் காணப்பட்டது.
அனிதாவிற்கு மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தினர். மேலும் சமூகநீதிக்கு பங்கம் விளைவிக்கும் இச்சட்டத்தை அழிப்போம் என் கூறி NEET அரசியலமைப்பு சட்டத்தின் நகல் கொளுத்தப்பட்டது. தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களுக்கு ஆதரவுக் கரமாகமே இலண்டனில் இருக்கும் இலங்கை மற்றும் இந்திய தமிழர்கள் இப்போராட்டத்தை முன்னிறுத்தினர்.
[robo-gallery id=”2295″]