கற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் பகுதி 01

1,124 . Views .

ஐரோப்பாவில் பிரித்தானியா மக்களின் பிரெக்ஸிட் ஆதரவான வாக்களிப்பினை தொடர்ந்து கற்றலோனியா பிராந்தியத்தின் இன்றைய நிலை ஐரோப்பாபாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சின் தெற்கு மலை தொடரால் பிரிக்கப்பட்டு,  ஸ்பெயின் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் பிரதேசம் கற்றலோனிய ஆகும். கற்றலன் மொழி பேசும் மக்கள் Valencia , the Balearic Islands , Aragon மற்றும் Catalonia ஆகிய ஸ்பெயினின் பிராந்தியங்களிலும் பிரான்ஸ் , இத்தாலி ஆகிய நாடுகளின் சில இடங்களிலும் பரவி வாழ்கின்றனர்.

ஸ்பெய்னின் 17 தன்னாட்சி கொண்ட பிராந்தியங்களில்  கற்றலோனியா 7.5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட  ஓர் பிராந்தியமாகும். ஸ்பெய்னின் மக்கள் தொகையில் 16 சதவீதம் கற்றலோனியர்கள் ஆகும். சுற்றுலா நகரான பார்சிலோனாவை தலைநகராக கொண்டதும் , 20சதவீத GDP யையும் , 30சதவீத ஏற்றுமதியையும் ஸ்பெய்ன் நாட்டிற்கு ஈட்டித்தரும் வளம் பொருந்திய பிராந்தியமாகும். 12ஆம் நூற்றாண்டு வரை தனியரசாக இருந்த கற்றலன் பிரதேசம் 16ஆம் நூற்றாண்டில் Nueva Planta Decrees 1716   எனும் ஆட்சி அதிகார சட்டத்தின் கீழ் நேரடியா ஸ்பானிய ஆட்சியின் கீழ் வந்தது.

1931 ஆம் ஆண்டு ஸ்பெய்ன் குடிஅரசு ஆகிய போது கற்றலோனியாவிற்கு தன்னாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட்டன. ஆனால் 1939 – 1975 வரையான பிராங்கோவின் சர்வாதிகார ஆட்சியில் கற்றலோனிய மக்கள் பெரிதும் நசுக்கப்பட்டனர். கற்றலோன் மொழிக்கு தடை விதிக்கப்பட்டது. கற்றலோனியர்களின் கலாச்சார அடையாளமான மனித கோபுரம் ( Castells or Human Tower) அமைத்தல் சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டது. பெற்றோர் பிள்ளைகளுக்கு ஸ்பானிஷ் பெயர்களை வைக்க வற்புறுத்த பட்டனர். சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக போராடியவர்களும் , கற்றலோனியா விடுதலைக்கு போராடியவர்களையும் கொன்று குவித்தது பிராங்கோவின் ஆட்சி. முதலாளித்துவ ஆட்சியின் சர்வாதிகார தன்மையை கேள்விக்கு உட்படுத்தி மில்லியன் கணக்கான இளைஞர்கள், தொழிலாளர்கள் மற்றும் கற்றலோனியா மக்கள் அணிதிரண்டனர்.

இந்நிலையில் 1978 இல் கொண்டுவரப்பட்ட புதிய அரசியலமைப்பு சட்டம் கற்றலோனியாவிற்கு மீண்டும் தன்னாட்சி அதிகாரங்களை வழங்கியது.

இவ்விதத்தில் சமுதாயத்தின் சோசலிச மாற்றங்கள் தடுக்கப்பட்டு, முதலாளித்துவ வர்க்கம் ஒரு அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற ஆட்சி மூலம் பெரும் சர்வாதிகார கூறுகளை உள்ளடக்கிய அரசியலமைப்பு சட்ட மாற்றத்தின் மூலம் நிலைமையை கட்டுப்படுத்தியது. ஸ்பெயின்  முதலாளித்துவமும் இடதுசாரி அமைப்புகளான PCE மற்றும் PSOE இதற்கு சம்மதித்து செயற்பட்டனர். இந்த அரசியலமைப்பு சட்டம் போலீஸ் அதிகாரம், கல்வி ,சுகாதாரம் ,பொதுத்துறை சேவைகள் என சில அதிகாரங்கள் உள்ளடங்கலாக தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஓர் பிராந்தியமாகியது.

2008 ஆம் ஆண்டின் பொருளாதர வீழ்ச்சியால் உழைக்கும் வர்க்கத்தினர்  , மாணவர்கள் , இளைஞ்சர்கள் வெகுவாக பாதிப்படைந்தார்கள். வேலை இல்லா திண்டாட்டம் , மற்றும் குறைந்த ஊதியங்கள், இளைஞர்களுக்கான எதிர்காலம் இல்லாதது ஆகியவற்றின் விளைவு  தேசிய விடுதலையை  நோக்கி நகர்த்துகிறது. 9.89 பில்லியன் யூரோகளை வாரியாக செலுத்தும் பிரந்தியம் தமது நிர்வாக நிதியாக 9.5 சதவிகிததையே பெறுகிறது. தமது வளங்கள் சுரண்ட படுவதாகவும் , தமது கலாச்சாரம் , மொழி என்பன முடக்க படுவதாகவும் கற்றலோனிய மக்கள் தங்கள் சுதந்திரம் கோரி 1909, 1931, 1934, 1936, 1977 … என தொடர்ந்து போராடி வருகின்றனர். 2010 மற்றும் 2014 களில் ஸ்பெய்ன் நீதிமன்றம் கற்றலோனியா பிராந்தியத்தின் தன்னாட்சி அதிகாரங்களை குறைக்கும் சட்டங்களை அமுல்படுத்தியது. இதனால் 135 உறுப்பினர்களை தேர்வு செய்யும் கற்றலோனியா பாராளுமன்றத்திற்கான தேர்தலில் சுதந்திர கோரிக்கை வலுப்பெற்றது.

தொடரும் ……