கற்றலோனியாவும் சுதந்திர கோரிக்கையும் – பகுதி 02

2015 செப்டேம்பர்  இல் நடைபெற்ற கற்றலோனியா பாராளுமன்ற தேர்தல் சுதந்திர கற்றலோனியாவிற்கான பொது  வாக்கெடுப்பு போலவே நடந்தேறியது.  பிராந்தியத்தின் இரு பெரும் கட்சிகளான CDC (Democratic Convergence of Catalonia) மற்றும் ERC (Republican Left of Catalonia ) சுதந்திரத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டுடன் Junts Pel Si ( Together for Yes ) எனும் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டன. 135 ஆசனங்களை கொண்ட கற்றலோனியா பாராளுமன்றத்திற்கான தேர்தலில் 39 சதவீத வாக்குகளை பெற்று 62 ஆசனங்களுடன் பெரும்பான்மையை தக்கவைத்தது. இது இவ்விரு கட்சிகளும் 2012 தேர்தலில் தனித்தனியே பெற்ற வாக்குகளை விட குறைவானதாகும். ஆட்சி அமைக்க 2 ஆசனங்கள் தேவைப்பட்ட நிலையில் 8.2 சதவீத வாக்குகளை பெற்று 10 ஆசனங்களை கைப்பற்றிய இடதுசாரி கட்சியான CUP (Popular Unity Candidacy) இன் துணை கொண்டு கற்றலோனியாவில் ஆட்சி அமைத்தனர்.

2014 ஆம் ஆண்டு கற்றலோனியா அதிபர் Artur Mas கற்றலோனியாவின் சுதந்திரம்  அடையாள பொது வாக்கெடுப்பை ஸ்பெயின் எதிர்ப்பையும் மீறி நடாத்தினர். 2.3மில்லியன் பேர் வாக்களித்த இந்த பொதுவாக்கெடுப்பில் 80சதவீதம் பேர் சுதந்திர கற்றலோனியாவிற்கு ஆதரவாக வாக்களித்தார்கள்.  Artur Mas அரசியலைமைப்பு நீதிமன்ற கோரிக்கையை கடைபிடிக்காமல் இந்த வாக்கெடுப்பை நடாத்தியதினர் என குற்றசாட்டி கடந்த மார்ச் மாதம் அரச பதவிகள் எதுவும் இரண்டு வருடத்திற்கு வகிக்க முடியாது என தடை உத்தரவு வழங்கியது.

 

அதன் பின்னர் அதிபர் ஆனா Carles Puigdemont தலைமையிலான கற்றலோனியா பாராளுமன்றம் கடந்த  ஜூன் மாதம் அரசியலமைப்பின் 155 பிரிவை செயற்படுத்தி பொதுவாக்கெடுப்பை அறிவித்தது. அக்டோபர் முதலாம் திகதி வாக்கெடுப்புக்கான நாளாகவும் அறிவிக்கப்பட்டது.  ஆளும்  Mariano Rajoy தலைமையிலான ஸ்பெயினின் பழமைவாத கட்சியான PP (Partido Popular) பொதுவாக்கெடுப்பை  நிறுத்துவதற்கு சகல நெருக்குதல்களையும் கற்றலோனியா மேல் தொடுத்தது.  October 28 ஆம்  திகதி பாடசாலை மாணவர்கள் ஒன்றியம் அழைப்பு விடுத்த போராட்டத்தில் 150,000 மாணவர்கள் வீதியில் திரண்டு போலீஸ் வன்முறைக்கும் , PP அரசாங்கத்தின் அடக்குமுறைக்கும் எதிராக கோஷமிட்டர்கள்  .

கற்றலோனியா பிராந்திய அரச பணிமனைகள் தேசிய போலீசாரால் சோதனைக்கு உட்படுத்தபட்டு 10 மில்லியன் வாக்கு பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. 700 கற்றலோனியன் மேயர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றம் சாட்டப்பட்டது. வாக்கெடுப்புக்கு ஆதரவாக செயற்பட்ட தனியார் கம்பெனிகளில் சோதனைகுளக்காக பட்டன. மேலும் 24 வாக்கெடுப்பு ஒழுங்கமைப்பாளர்களுக்கு  தினமும் 6,000 முதல் 12,000 யூரோக்கள் வரை தீர்ப்பு அபராதம் அளிக்கப்பட்டது . வாக்கெடுப்பை ஊக்குவிக்கும் 60 வலைத்தளங்கள் மூடக்கப்பட்டன . தேர்தல் பிரச்சாரம் மற்றும் சுதந்திரத்திற்காக சுவரொட்டிகளை வைத்திருப்பது சட்ட விரோதமானது, பிராந்திய அமைச்சர்கள் உட்பட 14 அரச அதிகாரிகளை கைது செய்தது ஸ்பெயின் தேசிய போலீஸ்.

ஆனால் அறிவித்த நாளில் பொதுவாக்கெடுப்பு நடைபெறும் என அறிவித்து அக்டோபர் முதலாம் திகதி வாக்கெடுப்பையும் நடத்தியது கற்றலோனியா பிராந்திய அரசு. வாக்கெடுப்பு நாள் அன்று வாக்களிப்பு நிலையங்களுக்குள் புகுந்து கட்டற்ற வன்முறையை நிகழ்த்தியது போலீஸ்.  மக்களை போலீஸ் தாக்குதலில் இருந்து காக்காகும் அரணாக கற்றலோனியா தீயணைப்பு படையினர் முன்னின்றனர். வாக்கெடுப்பு நாளில் மட்டும் போலீஸ் தாக்குதலால் 900 பேர் வரை காயமுற்றனர். வாக்குகள் எண்ணப்பட்டு 92சதவீதம் பேர் சுதந்திர கற்றலோனியா ஆதரவாக வாக்களித்துள்ளனர் என அறிவிக்கப்பட்டது.

ஸ்பெயின் அரசும் , மன்னரும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதே சட்டவிரோதமானது எனவும் அதனால் இந்த முடிவை ஏற்க முடியாது என அறிவித்தது. ஐரோப்பிய ஒன்றியம் வன்முறைக்கு கண்டனம் தெரிவித்ததோடு ஸ்பெயின் அரசின் இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் உள் விவகாரங்களில் ஒன்றியம் செயற்படாது என அறிவித்தது. மேலும் ஸ்பெயினில் இருந்து கற்றலோனியா பிரிவதால் ஒன்றியத்தில் இருந்தும் விலக நேரிடும் என்று எச்சரித்துள்ளது. ஐ.நா மன்றமும் வன்முறைக்கான எச்சரிக்கையுடனும் , உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற அறிவுரையுடனும் நிறுத்தி கொண்டது. ஆனால் கற்றலோனியா மக்கள் தமது விடுதலையை அடைய தொடர்ந்தும் போராடி வருகிறார்கள்.