அரசியல் கைதிகளும்.. போராட்டங்களும்…

1,259 . Views .

மதன்

இலங்கையில் அரசியல் கைதிகளின் உடனடியாக விடுதலை செய்யக்கூறி
தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு மற்றும் லண்டன இடதுசாரி போராட்ட அமைப்புகளுடன் இணைந்து லண்டன் இலங்கை தூதரகத்திற்கு முன்னால் 10-10-18 அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கையின் இருள் சிறைகளில் நூற்றுக்கும் அதிகமான தமிழ் அரசியல் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். போர் முடிந்து அண்ணளவாக பத்து ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆனால் இவர்களின் விடுதலைக்கான எந்த முயற்சிகளும் இலங்கை அரசினால் எடுக்கப்படவில்லை. மைத்திரி – ரணில் அணியுடன் கூட்டு வைத்து தமிழ் மக்களின் பிரச்சனைகளிற்கு தீர்வு காண்போம் என்று தேர்தலில் வாக்குக் கேட்டு பாராளுமன்றம் போன கூட்டமைப்பினரும் அரசியல் கைதிகளிற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்ததில்லை.

இலங்கையில் அரசியல் கைதிகள் என எவரும் கிடையாது எனவும், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டவர்களிற்கு எதிராகவே வழக்குகள் தொடுக்கப்பட்டிருப்பதாகவும் இலங்கையின் நீதி அமைச்சர் தலதா அத்துகோரள அண்மையில் தெரிவித்திருக்கிறார். ஆனால் இவர் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி – சுதந்திரக் கட்சியின் கூட்டமைப்பினர் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களின் போதும் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என பலமுறை கூறியிருக்கிறார்கள். இவர்கள் பதவிகளிற்கு வர முதல் அரசியல் கைதிகளாக இருந்தவர்கள் இன்று பயங்கரவாதிகளாக இருக்கிறார்கள். தேர்தல்களின் போது முகங்கள் மாறுகின்றனவே தவிர முதலாளித்துவ, இனவாத இலங்கை அரசுகள் என்றுமே மாறுவதில்லை.

இதுவரை இலங்கையில் 13 சிறைச்சாலைகளில் 100 க்கும் அதிகமான அரசியல் கைதிகளை சிறையில் அடைத்துள்னர். இதில் 70 % கைதிகளுக்கு எந்த வழக்கும் பதியாமல் உள்ளே வைத்திருகிறார்கள். வழக்கு பதிவிட்டாலும் அவர்களுக்கு பிணையில் செல்வதற்கு சட்டத்திலிடமிருக்கறது. ஆனால் தற் போதைய அரசு மறுக்கின்றது..

யுத்தத்திற்கு பொறுப்பாக அரசியலில் இருந்தவர்கள் நாட்டில் சுகந்திரமாக பிணையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் குறிபிட்ட சிறுபான்மை இன மக்களுக்கு இந்த அநீதி நடை பெறுகிறது. இதை கண்டித்து அரசியல் கைதிகள் இரண்டாவது முறையாக உண்ணா விரத பேராட்டத்தை மேற் கெண்டுள்ளனர். அதற்கு ஆதரவாக யாழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் யாழ்பாணத்திலிருந்து அனுராதபுரம் வரைக்கும் நடை பயண போராட்டத்தை செய்து கொண்டிருக்கிறார்கள்.

அரசியல் கைதிகளை பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யக்கூடிய அதிகாரத்தில் இருக்கும் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சேனநாயக்கா இந்த அரசியல் கைதிகளை மட்டும் பயங்கரவாதிகள் என்கிறார். இலங்கையின் சிங்கள இனவாதிகளின் கூச்சல்களிற்கு அடிபணிந்தே இவர்களை பயங்கரவாதிகள் என்றும் விடுதலை செய்ய மாட்டோம் எனவும் மைத்திரி அரசு கூறுகிறது.

பல மனித உரிமையாளர்கள், ஊடகவியலாளர்களை வெள்ளை வான் கும்பல்களை வைத்து கடத்திய மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்சாக்கள் பயங்கரவாதிகள் இல்லை. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்ற இலங்கையின் ஆட்சியாளர்கள், ஆயுதப்படையினர் எவரும் பயங்கரவாதிகள் இல்லை என்பது மட்டுமல்ல எவர் மீதும் எந்த விதமான வழக்குகளும் கூட இல்லை

மக்களே, எமக்காக போராடியதற்காக சிறை வைக்கப்பட்டு இன்று சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் எமது போராளிகளிற்காக நாம் இணைந்து போராடுவேண்டும். போராட்ட அரசியலில் பயணிக்கும் நாம் எமது பலத்தை எழுச்சிகரமாக நடத்தவேண்டும் என்று தமிழ் சொலிடாரிட்டி தொடந்து போராட்ட அரசியல் பாதையை முன்வைத்துகொண்டிருக்கின்றது.

[robo-gallery id=”3689″]