வாழ்வாதாரத்தை நோக்கி சோசலிசம் 2018

922 . Views .

வாழ்வாதாரத்தை நோக்கி
சோசலிசம் 2018

-மதன்-

பிரித்தானியாவில் கடந்த நவம்பர் 10 மற்றும் 11ம்திகதி சோசலிசம் 2018 மாபெரும் ஒன்று கூடல் நடை பெற்றது..இதல் பிரித்தானியாவில் வாழும் மக்களுக்கானஉரிமைகளுக்காக போராடும் அமைப்பான சோசலிஸ் பார்டி இதை ஒழுங்கு செய்தது. இதிலே பல்வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகள் நடை பெற்றன..அதில்
வேலைவாய்ப்பு. வீடு கல்வி சுகாதாரம் அகதிகளின் உரிமை குறைந்த பட்டச ஊதியம் மக்களுக்கான சேவைகள் உரிமகளுக்கான போராட்டங்கள். சர்வதேச போராட்ட சக்திகளின் இணைப்பு மற்று ஆளும் கட்சியின் சுரண்டல்கள். தனி நாடு காேரும் மக்களுக்கான உரிமைகள்.அடக்குமுறை யுத்தம். என பல தரப்பட்ட விடயங்கள் பேசப்பட்டன்.

இதில் அகதிகளின் உரிமைகள் அமைப்பும் பங்குபற்றியிருந்தது.
இதில் அமைப்பு சார்பாக உரையாடிவர்கள் கூறுகையில்.
பிரித்தானியாவில் புகலிட கோரிக்கையாளர்களுக்கு வேலை செய்ய அனுமதிப்பதில்லை. அவர்களுடைய வழக்குகளை இழுத்தடிப்பு செய்வதுடன். பலவருடங்கள் கழித்து தேவையற்ற காரணங்களை முன்காட்டி நிராகரித்து தடுப்புமுகாமில் வைத்து நாடுகடத்தி கொண்டிருக்கிறது. தொடர்ந்தும் அகதிகளை மிகவும் கேவலமாக பயன்படுத்தி கொண்டிருக்கும் தற்போதைய கான்சவற்றிவ் ஆளும் கட்சியின் கொள்கைகள் அகதிகளுக்குமட்டுமல்ல பிரித்தானியாவில் சாதாரண உழைக்கும் மக்களுக்கும் எதிராகவேயுள்ளது. பல அமைப்புக்கள் பிரித்தானியாவில் இருந்தாலும் அகதிகள் சார்பாக உரிமைகளை பெற்றெடுப்பதற்கு முன்வருவதில்லை. பல நாடுகளில் யுத்தங்கள் நடைபெறுகின்றன இதனாலே அகதிகளின் வருகை அதிகரிக்கன்றது இந்த யுத்தத்தில் பாதிக்கபட்டு புகலிடம் கோரிவரும் அகதிகள் என்னுமொரு சிக்கலில் தவித்து கொண்டுள்ளார்கள். வழக்கறிஞர்களோ பணமிருப்வர்களை மட்டும் தங்களை நாடவும் என்று கூறுகின்றனர். அவர்களும் வேறு வழியின்றி மறைந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இங்குபலவருடங்களுக்கு முன்னதாக அகதிகளா வந்து சொந்த தொழில் புரியும் முதலாளிகள். புதிதாக அகதி கோரியிருப்பவர்களுக்கு குறைநத வருமாணத்துடன் £3-5 கொடுத்து அவர்களது உழைப்பை சுரண்டுகின்றனர். சில அகதிகள் வேலையின்றி பிச்சை கேட்கும் நிலமைக்கும் தள்ளப்பட்டிருக்கின்றனர். ஒரு அகதிக்கு குடிவரவு திணைக்களம் ஒரு நாளைக்கு அண்ணளவாக £7
பவுண்ட்கள் மட்டுமே கொடுக்கின்றது. சிலருக்கு எந்தவித பணமும் கொடுப்பதுமில்லை. இவ்வாறு பல இன்னல்களை சந்திப்பது மன உளைச்சலிற்கு உள்ளாக்கியுள்ளது.இதை தற்போதைய தற்போதைய ஆளும்கட்சி சர்வசாதாரனமாக செய்கிறது என்றும் கூறப்பட்டது.

இந்த பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு அகதிகளுக்காக போராட்ட அமைப்பை கட்டுவதே .இதன் அடிப்படையில் இவ்வமைப்பு 2016 refugee rights campaign என்ற பெயருடன் ஆரம்பிக்கப்பட்டது. இந்த போராட்ட அமைப்பு அனைத்து அகதிகளை இணைக்கும் சக்தியாகவுள்ளது. இங்கிலாந்தில் வாழும் போராட்ட சக்திகளான சோசலிஸ் பார்ட்டி இந்த அமைப்புக்கு முழு ஆதரவை தெரிவித்துள்ளது.இதுவரைக்கும் இரண்டு தொழில்சங்கங்கள் தமது ஆதரவை தந்துள்ளது. இவர்களது நோக்கம்போராடடம் மட்டுமல்லாமல். நாடுகடத்துதை தடுத்து நிறுத்துதல். இலவச சட்ட ஆலோசனை மற்றும் இலவச சேவைகளை நோக்கி அவர்களது தேவைகளை பூர்த்தி செய்யவும் வழிவகுக்குகின்றனர். மற்றும் இவ்வமைப்பு பல தொழில்சங்கங்களின் ஆதரவை பெறுவதற்க்கு இந்த அமைப்பு தொடர்ந்தும் வேலை செய்து கொண்டிருக்கின்றது.

பிரித்தானியாவில் பல தடுப்பு முகாம்கள் இருந்தாலும் தற்பொழுதுள்ள போராட்ட சக்திகளின் அளுத்தம். காரணமாக குடிவரவு திணைக்களம் கடந்த நான்கு வருடங்களில் இரண்டு தடுப்புமுகாம்களை ஒவ்வொன்றாக மூட ஆரம்பிக்கன்றனர்.தடுப்பு முகாம்களை பொறுத்தவரை அகதிகளை ஒரு குற்றவாளிகள் போல் நடத்துகின்றனர்.இந்த தடுப்பு முகாம் தனியார் நிறுவனங்களால் வழிநடத்தப்படுகின்றன.அங்கு அகதிகளை அடைத்து வேலைக்கு அனுமதியளித்து ஒரு மணித்தியாலத்திற்கு £1பவுண்ட் என்ற அடிப்படையிலே வேலை வாங்குகிறார்கள். இதை பல தடவை பல இடங்களில் அகதிகளுக்கான உரிமைகள் அமைப்பு வெளிக்காட்டியிருக்கின்றது. பல அகதிகள் மன உளைச்சல் மற்றும் தற்கொலை முயற்சியிலும் ஈடுபடுகின்றனர். இதை கவனத்தில் கொள்ளாத புலம் பெயர் அமைப்புக்கள் தங்களது சுயநலஅரசியலில் பயணிப்பது மிகவும் கவலைக்குரிய விடையமெனவும் குறிப்பிடப்படுகிறது.

அண்மையில் விண்றஸ் கப்பலில் இன்நாட்டில் பல வருடங்களுக்கு முன்னதாக வேலைக்காக வந்த குடியேறிகளே இந்த கரிபியன் ஆபிரிக்க இன மக்கள். இவர்கள் பலதரப்பட்ட கடும் உழைப்பு கொடுத்து இன்நாடு முன்னிற்கு வருவதற்கு பாடுபட்டவர்கள். இம்மக்களை நாடுகடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பிரித்தானியா போராட்ட சக்திகளால் முறியடிக்கப்பட்டது.

சோசலிசம் 2018 பல்லின மக்கள் இந்த அகதிகளுக்கான கூட்டத்தில் கலந்து காெண்டனர். இவ்வமைப்பின் செயல்பாட்டை வாழ்த்தி அவர்களது ஆதரவையும் தந்துள்ளார்கள் . இவ்வாறு பலதரப்பட்ட அடக்குமுறைகளை நாம் எதிர்த்து ஒன்றாக இணைய வேண்டும் என்று கூறப்பட்டன.