காணாமல் ஆக்கப்பட்டோரும் மன்னார் புதைகுழிகளின் மறைக்கப்டும் உண்மைகளும்.

1,350 . Views .

இலங்கையில் 2009 இல் யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தத்தை கடக்கப்போகும் இந்தத் தருணத்தில் வாழ்வாதாரத்துக்கே திண்டாடும் நிலையிலேயே பாதிக்கப்பட்ட தமிழ் சமூகம் காணப்படுகிது. அதுமட்டுமன்றி இன்றுவரை நியாயம்தேடி அலையும் ஒருசமூகமாகவும் இவர்கள் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் இச்சமூகத்தின் வலிகள் மேலும் மேலும் அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை.அவ்வாறு நீங்கா
வலியை ஏற்படுத்திக் கொண்டு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்றே காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனை.

இந்நிலையில் இவர்கள் மத்தியில் மீண்டும் சோகத்தினை உண்டாக்கியிருப்பது
மன்னார் மண்ணில்கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள். இலங்கையில் மேற்குநகராக மன்னார்த் தீவு விளங்குகின்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இச் சிறு தீவில் தற்போது அங்காங்கே மனிதப் புதைகுழிகள் தோண்டப்பட்டு மனித எச்சங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. தமிழ் மக்களின் பிரச்சனைகளுள் மனித உணர்வுகளுடன் அதிகார வர்க்கம் விளையாடும் விளையாட்டாகவே காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனை காணப்படுகிறது. இவர்கள் தொடர்பாக பாதிக்கப்பட்டோர் குறிப்பாக பெண்கள் வீதியில் இறங்கிப் போராடுகின்ற நிலைகள் அதிகரித்து வருவதோடு சாட்சியங்கள்அழிந்து வருவதும் நாம் அறிந்ததே.

கடந்த கால அரசாங்கத்தைப் போலவே நல்லாட்சி அரசாங்கத்திலும்
ஒடுக்கப்பட்டமக்களின் நியாயமான போராட்டங்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மன்னார் புனித பூமியான திருக்கேதீஸ்வர வளாகத்தில் புதைகுழி
தோண்டப்பட்டு அது மயாணம் இல்லையென பல ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டும் அதற்கான தீர்வுகள் கிடைக்கப்படாத நிலையில் மன்னார் நுழைவாயிலில் சதோசா கட்டிடத்தில் மற்றுமொரு புதைகுழி தோண்டப்படுகிறது. அடையாளங் காணப்பட்டவை இவை அடையாளங் காணப்படாதவை இன்னும் எத்தனையோ?
இந்நிலையில் 230 மேல்பட்ட மனித எச்சங்கள் எலும்புக்கூடுகள் மண்டையோடுகளாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் 20 க்கும் மேற்பட்ட மண்டையோடுகள் சிறுவர்களின் எலும்புக்கூடுகளாக உள்ளதுடன் அதில் தாயும் பிள்ளையும் ஒன்றாக
இருக்கும் மனிதக் கூட்டினைக் கூட காணக்கூடியதாக உள்ளது. அத்துடன்
இவ்விரண்டு புதைகுழிகளிலும் நிர்வான நிலையிலேயே சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இலங்கை யுத்த வரலாற்றில் மன்னார்
நகரம் பெரும்பாலும் இராணுவக்கட்டுப்பாட்டிலே இருந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு எலும்புகளும் பற்களுமாக எச்சங்கள் தோண்டி எடுக்கப்படுகையில் சிறுபாண்மை மக்களுக்கான தீர்வை இவ் அரசு எவ்வாறு முன்வைக்கப் போகிறது? என்ற கேள்வி எம்முன்னே விரிகிறது. இன்று எம்மவர்களின் எச்சங்களாக தோண்டி எடுக்கப்படும் எலும்புகளையும் பற்களையும் போல மண்ணோடு மண்ணாக மூடிப்புதைக்கப்பட்ட தமிழினப் படுகொலைகளும் என்றாவது ஒரு நாள் தோண்டி எடுக்கப்படுமா? என்று ஏக்கத்துடன் உள்ளனர் பாதிக்கப்பட்ட தரப்பினர்.

இவை இவ்வாறு இவை நகர்ந்து கொண்டிருக்க காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் 600 நாட்களுக்கு மேலாக ஈழத்தில் போராடிக் கொண்டிருக்கும் தருணத்தில் இது சம்மந்தமாக இதற்கு பொறுப்புக் கூறுபவர்கள் யார்? நாட்டின்
யுத்ததத்pன் போது இன அழிப்பிற்கு காரணமானவர்களா? அல்லது ஜநா மனிதஉரிமைக்காப்பகமா? என்ற கேள்வி பாதிக்கப்பட்டவர்களால் எழுப்பப் படுகிறது.

இலங்கையில் இரகசிய முகாம்கள் எதுவும் இல்லை என பிரதமர்
ரணில்விக்கிமசிங்க தெரிவித்துள்ள நிலையில் அரசியல் கைதிகள் எவரும்
இல்லையென இராஜாங்க அமைச்சர் ஒருவரும் தெரிவித்துள்ளார். அத்துடன் யுத்தத்தில் இறந்து போயிருக்கலாம் அல்லது வெளிநாடு சென்றிருக்கலாம் என பொறுப்பிலுள்ள ஆளும் கட்சியினர் பொறுப்பற்ற பதிலை கூறுமதே தருணம் எதிர்க்கட்சியாக தங்களை அடையாளப்படுத்தி தமிழ் மக்கள் பிரதிநிதியாக தம்மை சித்தரித்துக் கொள்பவர்கள் மூலமாவது ஏதாவது பதில் கிடைக்கும் என நம்பும் மக்கள் நம்பிக்கையும் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக் கொண்டிருப்பதுடன் தேர்தல் காலங்களில் இவர்களது பேசு பொருளாகவே காணாமல் ஆக்கப்டோர் பிரச்சனை காணப்படுகிறது.

முந்தைய அரசாங்கங்கள் தமது வாக்குறுதிகளை காப்பாற்றுவதில் தோல்வியுற்ற நிலையில் இவ்வரசாங்கமும் தமது வாக்குறுதிகளை காப்பாற்றும் என்பதில் நம்பிக்கை இழந்த மக்கள் சிலர் தமது தந்துரோபாய ஈடுபாடுகளை கைவிட விரும்புகின்றனர்.

கொலை செய்பவர்களும் அவர்கள் தான் நீதிபதிகளும் அவர்கள் தான் நீதி சொல்பவர்களும் அவர்கள்தான் என்றால் உண்மை எப்படி வெளிவரப் போகிறது. என்ற கேள்விக்கு திருக்கேதீஸ்வர புதைகுழி சிறந்த சான்றாகும். இதில் எதிர்வழக்காளியான புலனாய்வுப் பிரிவினருக்கு நியாயம் தேடும் நிகழ்வே இடம் பெற்று வருகிறது.

தற்போது OMP என அழைக்கப்படும் விசாரணைக் குழுவானது ஆட்சியில் இருக்கும் மைத்திரிபாலஸ்ரீசேனாவினால் நியமிக்கப்பட்டது. OMP என அழைக்கப்படும் காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் ஆணையாளர்கள் மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை மாத்தறை, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி போன்ற இடங்களிற்கு சென்று 2000 ற்கும் அதிகமானோரை சந்தித்தனர். இந்நடவடிக்கையை மக்கள் இதற்கு முற்பட்ட கால ஆணைக்குழுக்கள் போலவே வெறுமனே இதுவும் நம்பிக்கையுடன் ஏமாற்றப்படும் என அஞ்சுகின்றனர்.

இவ் அரசாங்கமும் போரினை வெற்றி கொண்ட இராணுவத்தினரை எச்சந்தர்ப்பத்திலும் விட்டுக் கொடுப்பதாக இல்லை காணாமல் போனோர் விடயமானாலும் சரி படையினரின் காணி சுவிகரிப்பு சம்பவமானாலும் சரி அரசாங்கம் தனது ஆதரவை இராணுவத்திற்கே கொடுத்து வருகின்றது.
இராணுவத்தை குற்றச்சாட்டில் இருந்து காப்பாற்றுவதே அரசின் கடமையாகும். ஏனெனில் இராணுவத்தினரே யுத்த கதாநாயகர்கள். அதுமட்டுமன்றி தென்பகுதி மற்றும் பெரும்பாண்மையினரதும் விமர்சனத்திற்கு அஞ்சியும் எதிர்கால வாக்கு வங்கியினைப் பாதுகாப்பதிலும் அரசு முனைப்புக் காட்டுகிறது. குறிப்பாகச் சொல்லப்போனால் றாணுவத்தை எத்தருணத்திலும் அரசு காட்டிக்கொடுக்க தயாரில்லை.
இவ்வாறான வேளையில் பாதிக்கப்பட்ட தரப்பு பெரிதும் நம்புகின்ற சர்வதேச சமூகத்தின் பாராமுகம் இன்று வலுவடைந்துள்ளது. இதனால் விரக்தியுற்றிருக்கும் மக்கள் நீதி வேண்டிப் பல வழிகளிலும் போராட வேண்டியுள்ளது. 1980 களின் பிற் பகுதியிலிருந்து 60000 தொடக்கம் 100000 பேர் வரை காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளதுடன் உலகில் மிக அதிகமாக காணாமல் ஆக்கப்படுதல் நிகழ்ந்த நாடுகளில் முன்னணி நாடுகளில் ஒன்றாக இலங்கை உள்ளதாக மனித உரிமைகள் காப்பகம் விடுத்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்நிலையில் நீதி நியாயம் கிடைக்கும் என்பது எப்படிச் சாத்தியம்;.

மேலும் 2018 இல் சதோசா விற்பனைக் கட்டட வளாகத்தில் தோண்டி எடுக்கப்பட்ட எச்சங்கள் காணாமல் ஆக்கப்பட்டோரின் எச்சங்களாக இருக்கலாம் என காணாமல் போனோரின் உறவினர்கள் சந்தேகித்து அவர்களினால் கொடுககப்பட்ட அழுத்தத்தை அடுத்து. அதனைத் தோண்டுவதற்கு மன்னார் நீதி மன்றத்தின் அனுமதி கிடைத்ததுடன் தொடர்ந்து கொடுக்கப்பட்ட அழுத்தத்தினால் OMP ம்
இதில் தலையிட்டு வருகிறது. இவ் எச்சங்கள் சேகரிக்கப்பட்டதன் பின் இம்
மாதிரிகளை காபன் பரிசோதனைக்காக கௌதமாலாவிற்கு அனுப்பிவைக்குமாறு
பாதிக்கப்பட்ட தரப்பு கோரிக்கை வைத்தும் அது மறுக்கப்பட்டு அமெரிக்காவில் புளோரிடாவிற்கு இவ் எச்சங்கள் அனுப்பப்படவுள்ளன. பொமப்பல்ஸ் காபன் 14 எனப்படும் தொழில் நுட்ப முறையானது இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் இறந்த ஒருவரது எலும்புக் கூட்டினை வைத்து அவர் எந்தக்காலத்தில் இறந்தார் என்பதை துல்லியமான முறையில் வெளிபபடுத்தப்படுத்த முடியும். இதை எவ்வாறு அரசாங்கம் கையாளப் போகிறது. அல்லது மீண்டும் பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றப்போகிறார்களா? என்ற பல கேள்விகள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது.
மன்னார் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஜெனாதிபதி சென்றிருந்தார். இவர் தலைமையில் நானாட்டான் பகுதியில் மரநடுகை தினத்திற்காக 5000 மரக்கன்றுகள் நடப்பட்டன எதைமறைத்து எதை வளர்ப்பதற்கு இத்திட்டம் என்பது மக்கள் மத்தியில் கேள்வியாகவே உள்ளது.
மன்னாரில் தற்போது தோண்டி எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மனித எச்சங்கள், கடந்த கால மனித உரிமை மீறல்களுக்கும் காரணியாக இருப்பவர்களை நீதிக்கு முன் நிறுத்தவும், தமிழ்ப் பிரதிநிதிகள் என்ற பெயரில் இணக்க ஆட்சியில் ஆளும் கட்சிக்கு முண்டுகொடுத்துக் கொண்டிருப்பவர்களை எதிர்த்தும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதிக்காக நாம் ஐக்கியப்பட்டு போராட்ட சக்தியாக மாறி
போராட்ட அரசியலில் நாம் நகரத் தயாராகிக் கொள்ள வேண்டும்.

தொடரும்… மதன் (தமிழ் சொலிடாரிட்டி)
ஆய்வு உதவி Jena.