மலையக மக்களின் 1000 ரூபா கோரிக்கையை சுரண்டிய முதலாளிகள்…

1,127 . Views .இலங்கை மலையக பெரும்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் நாளொன்றிற்கு 1000 ரூபாவாக உயர்த்தக் கோரி பல போராட்டங்கள் கடந்த மூன்று வருடங்களாக மேற் கொள்ளப்பட்டது. ஆனால்  மீண்டும் தோட்ட தொழிலாளர்கள்  28-1-19 அன்று கூட்டு ஒப்பந்த மூலமாக ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள். 2016 ஆண்டில் தொழிலாளர்களுக்கான அடிப்படை சம்பளம்  நாளொன்றிற்கு Rs. 500ரூபா. இவ்வாண்டில் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம்   அடிப்படை சம்பளம் Rs700 ரூபா என கைசாத்திடப்பட்டுள்ளது. இது ஒன்றும் அவர்களுக்கு கிடைத்த வெற்றியல்ல. மாறாக  புதிதாக ஒன்றை கொடுத்து மறு பக்கத்தில் வேறு விதமாக வெட்டி எடுக்கப்பட்டிருக்கின்றது. ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட உற்பத்தி திறன்படி கொடுப்னவு R.s140 ரூபா ஆகவும் வரவுக்கான கொடுப்பனவு R.s 60 ரூபாவும் இல்லாது செய்யப்ட்டுள்ளது.
வெறும் 20 ரூபா சம்பள அதிகரிப்பை பெற்று கொடுத்து தொழிலாளர்கள் ஏமாற்றபட்டிருக்கின்றனர்.ஒவ்வொரு முறையும் மேற்கொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தத்தினால் தொழிலாளர்கள் ஏமாற்றத்தை மாத்திரமே கண்டுள்ளனர்.

ஒவ்வொரு முறை தேர்தலின் போதும்   தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தைக் பெற்றுக்கொடுத்து விடுவோம் என்று பலதரப்பட்ட கட்சி சார்பாக வாக்கு கேட்டு வந்தவர்கள் இன்று அமைதியாக சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

தற்போது செய்யப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில் தேயிலை தோட்ட உரிமையாளர் சங்கம் சார்பில்  கனிஷ்க வீரசிங்க மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் சார்ப்பில்  வடிவேல் சுரேஸ் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.


ஆனால் இந்த ஒப்பந்தம் மிகவும் ரகசியமாக அலரிமாளிகையில் செய்யப்பட்டிருக்கின்றது. பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பாக  முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இரண்டு வருடங்களுக்கு  இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்றது. ஒருவருடைய இழப்புக்கான நஸ்ட ஈடு. ஊக்குவிப்பு போனஸ் மற்றும் சுகாதார சேவை என்பன இந்த ஒப்பந்தத்தில் மாற்றியமைக்கபடவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் குறிப்பிடுகின்றனர்.


ஆறுமுகம் தொண்டமான் மற்றும் வடிவேல் சுரேஸ் இவ்விரண்டு ஏமாற்று வித்தைக்காரர்களும் மக்களுக்கு கூறிக்கொண்டிருப்பது நாங்கள் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்தியுள்ளோம் என்பதைத்தான். இதைவிட என்ன  எதிர் பார்க்க முடியும். எனக் கூறி மீண்டும் அம் மக்களின்  அடிப்படை கோரிக்கைகளை மறுத்து ஏமாற்றமடைய வைத்துள்ளார்கள்.
ஆனால் மக்களோ இது தொடர்பான தமது அதிருப்தியை வெளிக்காட்டியுள்ளனர். யாரவது ஓட்டு கேட்க வந்தீர்கள் என்றால் தகுந்த பாடத்தை புகட்டுவோம் . நாங்கள் கேட்பது அடிப்படைச் சம்பளம் நாளொன்றிற்கு 1000  ரூபா. என கூறி தொடர்ந்து போராடத்திற்கு தொழிலாளர்கள் தயாராகிவருகின்றனர்.

இலங்கையின் பொருளாதாரத்தின் தூணாக இருப்பவர்கள் இந்த மலையக தோட்ட தொழிலாளர்கள். அங்கு வசிக்கும் மக்கள் தமது வாழ்க்கைச் செலவை சமாளிப்பதற்கு குறைந்தபட்சம் நாளொன்றிற்கு ஆயிரம் ரூபா தேவைப்படும்.தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் மாதாந்த்த ஊதியமானது அன்றாடம் கூலி செய்பவர்களுக்கு கிடைக்கும் வருமானத்தை விடவும் குறைவானது. இவர்களிற்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்கு நல்லாட்சி அரசு வேகம் காட்டுவதில்லை. இவர்களுக்கான கல்விச்சேவைகளும் மருத்துவச்சேவைகளும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. பொருட்களின் விலையேற்றம் முயல் வேகத்தில் ஓடிக்கொண்டருக்கின்றது .ஆனால் உழைப்பாளிகளின் ஊதியம் அந்த வேகத்தில் இல்லை.


இலங்கை உலகின் இரண்டாவது பெரிய தேயிலை ஏற்றுமதி நாடாகும், இதன் மூலம் இலங்கை கனிசமான அன்னிய செலாவணியை பொறுகின்றது.


2016 புள்ளிவிபரங்களின் படி தேயிலை ஏற்றுமதியில் முன்னிலையில் சீனா இருக்கிறது.  $1.5 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான  மொத்த தேயிலை ஏற்றுமதிகளில் 22.8% சதவீதம் சீனாவின் கையில் இறக்கிறது. இரண்டாவதாக இலங்கை, $1.3 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான 19.2%சதவீத ஏற்றுமதியை செய்து வருகிறது. அடுத்ததாக
கென்யா  $ 680.6 மில்லியன் 10.4% சதவிதமாகவும் மற்றும் இந்தியா, $66.17 மில்லியன் அமெரிக்க டாலர் 10.1 %சதவீதமாகவும் இருக்கினறது  என ஆய்வு கூறுகின்றது.

பெரும்முதலாளிகளின் இலாபம் பன்மடங்காகும்.கஸ்டப்பட்டு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சரியான சம்பளம் கிடைப்பதில்லை. தோட்டத் தொழிலாளர்களின் மூலம் நாட்டுக்கு கிடைக்கும் வருமானம் அரசாங்கத்தில் உள்ள சிலருக்கே சென்றடைகின்றது.
ஆனால் நிலமற்ற தேயிலை தொழிலாளர்கள் இலங்கையில் வறிய சமூகமாகவே உள்ளனர்.

மலையகத்தில் ஒரு தோட்டத் தொழிலாளி இறந்தால் R.s 2000 ரூபா மட்டுமே  வழங்கப்படுகிறது.
ஒரு வருடத்தில் ஊக்குவிப்பு போனசாக R.s 750 ரூபாவும் மட்டுமே வழங்கப்படுகிறது.
வரவு-செலவு திட்டத்தில்  ஏனைய துறை தொழிலாளருக்கு வருடந்தோறும் சம்பள உயர்வு கிடைக்கும். அந்த சம்பள உயர்வு மலையக தொழிலாளர்களுக்கு கிடைப்பது இல்லை. தோட்ட நிறுவனங்களும், தொழிற்சங்கங்களும் பேசி முடிவு எடுக்குமாறு அரசாங்கம் கையை கழுவி கொள்கிறது.

தொடர்ந்தும் நாம் களத்தில் நிற்க வேண்டும். அடிப்படை சம்பளம் 1000 ரூபா ஆக உயர்த்தப்பட வேண்டும்.இலங்கையில் நடக்கும் ஆயிரக்கணக்கான போரட்டங்களுக்கு மத்தியில் மலையக மக்களின் போராட்டமும் இணையவேண்டும். நாம் ஐக்கியப்பட்டு ஒரே குரலில் ஒடுக்கப்படும் மக்களுக்காக குரல் கொடுப்போம்.உரிமைகளை வென்றெடுப்போம்.