பிரிகேடியர் பிரியங்கா தொடர்பில் பிரித்தானிய நீதிமன்றம் அறிவிப்பு.

1,406 . Views .

கடந்த வருடம்(2018) பெப்ரவரி 4ம் திகதி பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தின்போது ஒரு ஆர்ப்பாட்டத்தை தமிழ் சொலிடாரிட்டி ஒழுங்கமைத்திருந்தது. அதன்போது பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவ ஆர்ப்பாட்டதத்தில் ஈடுபட்டவர்களிற்கு கொலை மிரட்டல் செய்தது தொடர்பான வழக்கு இன்று வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில்  விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே  பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் கடந்த வாரம் பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் இலங்கையின் அரசியல் அழுத்தம் காரணமாக பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சு வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை ரத்துச் செய்திருந்தது. இராஜதந்திர சலுகையை காரணம் காட்டி குறித்த தீர்ப்பை திரும்பப் பெற்றிருந்த நிலையில் மீண்டும் குறித்த தீர்ப்பு தொடர்பான விசாரணை இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது. தற்போது பிரியங்க பெர்னாண்டோ பிரித்தானியாவில் இல்லாத நிலையில் அவரிற்கு குறித்த இராஜதந்திரிகளிற்கான சலுகை பொருந்தாது என்ற வாதத்தை வழக்கறிஞ்சர் Paul Heronமற்றும் பல வழக்கறிஞ்சர்கள் இணைந்து முன் வைத்தனர். இதைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கத்தின் பண உதவியுடன் பிரியங்கா பெர்னான்டோ சார்பில் வாதாடியவர்கள் தங்களிற்கு இது தொடர்பாக பதில் அளிப்பதற்கு காலம் தேவை என்பதை முன்வைத்தனர். இதனை ஏற்று வருகின்ற மார்ச் 1ம் திகதிக்கு குறித்த வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


இவர் மீதான விசாரணை நடைபெற்று கொண்டிருந்த அதே வேளை குறித்த தீர்ப்பு மீளப்பெறப்பட்டதிற்கும் -குறித்த தீர்ப்பு தொடர்பாக பிரித்தானிய வெளியுறவு துறையின் அரசியல் அழுத்தத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்தும் தமிழ் சொலிடாரட்டி அமைப்பு மற்றும் பல அமைப்பினரால் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்திற்கு வெளியே போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.  குறித்த போராட்டத்தில் யுத்த குற்றவாளியான பிரியங்கா பெர்னாண்டோவினை உடனடியாக கைது செய், தமிழர்களிற்கான நீதியை உடனடியாக வழங்கு, பிரித்தானிய நீதித்துறையின் மீது அரசியல் அழுத்தங்களை பிரயோகிக்காதே போன்ற கோரிக்கைகள் தமிழ் சொலிடாரட்டி அமைப்பினரால் முன்வைக்கப்பட்டது. மேலும் எதிர்வரும் மார்ச் 1ம் திகதியும் குறித்த தீர்ப்பிற்கு எதிராக மீண்டும் ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக குறித்த ஆர்ப்பாட்ட ஒருங்கமைப்பாளர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடம் :
In Front of Westminster Magistrates’ Court
181 Marylebone Road,
London, NW1 5BR. UK

நேரம் :
01 March 2019
10AM – 3PM

மேலதிக தகவல்களுக்கு :
மதன் : 07454471030
நுஜிதன் : 07525785820
கேதீஸ் : 07540 095113