மக்கள் போராட்டங்களில் தொழிற்சங்கங்கள்

1,846 . Views .

லாவன்யா ராமஜெயம்

ஒடுக்கப்படும் மக்களின் உரிமைபோராட்டமும்  தொழிலாளர்களின் போராட்டமும் ஒரே கோட்டில் பயணிப்பவை. தமிழர்களின் போராட்டத்தை தொழிலாளர்களின் போராட்டத்தோடு ஒன்றிணைக்கும்   ஒரே புலம்பெயர் அமைப்பு தமிழ் சொலிடாரிட்டி மட்டுமே.

தொழிற்சங்கமானது ஒரு குறிப்பிட்ட வர்த்தக, தொழில், அல்லது நிறுவன  தொழிலாளர்கள் சங்கம், ஊதியம், நலன்கள், வேலை நிலைமைகள் அல்லது சமூக மற்றும் அரசியல் நிலைகளை மேம்படுத்துவதற்கான நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது.

வேலை செய்பவர்கள் தங்கள் உரிமைகளைச் சரியாக பெற்றுக்கொள்வதற்காக தாமே இணைந்து உருவாக்கும் அமைப்புத்தான் தொழிற்சங்கம் . தனியாக ஒருவர் தனது உரிமைகளுக்குப் போராடுவாராயின் அவரை ஒதுக்குவதும் அவர் உரிமைகளை மறுப்பதும் இலகுவாகிப் போய்விடுகிறது. ஆனால் வேலை செய்பவர்கள் இணைந்து கோரிக்கைகளை முன்னெடுப்பாராயின் அந்தக் கோரிக்கைகள் வென்றெடுப்பதற்கான சாத்தியங்கள் அதிகரிக்கிறது. ஒன்றுபட்டு தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் முதலிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் பல்வேறு உரிமைகளை  வென்றெடுத்திருக்கிறார்கள்.

தொழிலாளர்கள் இன்று அனுபவிக்கும் அனைத்து உரிமைகளும் இத்தகைய ஒன்றுபட்ட போராட்டங்களால் வென்றெடுக்கப்பட்டவையே தவிர அரசாங்கங்களாலோ பெரும் முதலாளிகளாலோ தாமாக வழங்கப்பட்டவையல்ல.

தொழிற்சங்கத்தின் உறுப்பினர்கள் முக்கியமாக தொழிலாளர்கள் இருக்க வேண்டும். மற்றும் தொழிற்சங்கத்தின்  முக்கிய குறிக்கோள்களில் ஒன்று பணியிடத்தில் அதன் உறுப்பினர்களின் நலன்களைப் பாதுகாப்பதும், முன்னேற்றுவதும் ஆகும்.

பெரும்பாலான தொழிற்சங்கங்கள் முதலாளிகளிடமிருந்து சுயாதீனமாக உள்ளன. இருப்பினும், தொழிற்சங்கங்கள் முதலாளிகளுடன் நெருக்கமான உழைப்பு உறவுகளை உருவாக்க முயற்சி செய்கின்றன. இது சில நேரங்களில் அவர்களது பொது நலன்களையும் நோக்கங்களையும் அடிப்படையில் கொண்டதாகும்.

பிரித்தானியாவை பொருத்தமட்டில் தொழிற்சங்கத்தில் 6.5 மில்லியன் மக்கள் உறுப்பினர்களாக உள்ளனர். உழைக்கும் மக்களின் சக்தி தொழிற்சங்கத்தில் உள்ளது.

சாதாரணமாக தமிழ் மக்களிடையே ஒரு கேள்வி இருந்துக் கொண்டே இருக்கும். ஏன் தொழிற்சங்கத்தில் இணைய வேண்டும்? மாதாந்தம் கட்டணம் செலுத்த வேண்டுமா? தொழிற் சங்கத்தில் இணைவதால் எங்களுக்கு என்ன பிரயோசனம் ? நல்ல கேள்வி ஊதிய உயர்வு, அடிப்படை ஊதியத்தை உறுதி செய்தல் , விடுமுறை ஊதியத்தை உறுதிப்படுத்தல், மேலதிக வேலை நேரத்திற்கான ஊதியம், ஓய்வூதியம் உறுதிப்படுத்தல், வேலையிடத்தில் பாதுகாப்பு, வேலை நீக்கம் செய்வதற்கெதிரான பாதுகாப்பு , வேலைநிறுத்தம் செய்வதற்கான உரிமை ஆகிய பல்வேறு உரிமைகள் உறுதிப்படுத்துவதற்கு தொழிற்சங்கம் அத்தியாவசியமானது.

தொழிற்சங்கங்களின் முக்கிய பங்கு, அதன் உறுப்பினர்களின் நலன்களைப் பாதுகாத்தல், அதன் வர்த்தகத்தின் நம்பகத்தன்மையை பாதுகாத்தல், பொருளாதார நலன்களைப் பெறுவதன் மூலம் உயர் ஊதியங்களை அடைதல் மற்றும்  அதன் உறுப்பினர்களின் நலனை உறுதி செய்வதாகும்.

பணியிடத்தில் வேலை நிலைமைகளை மேம்படுத்துவதோடு பணியிடத்தில் நியாயமற்ற பணி நீக்கத்திற்கு எதிராக உறுப்பினர்களைப் பாதுகாப்பதற்கும் ஒரு வேலை பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கிறது. அத்தோடு, சட்ட மற்றும் நிதி ஆலோசனைகள் வழங்குகிறது.

நீங்கள் தொழிற்சங்கத்தில் இணைவதன் மூலம் உங்கள் வேலை இடத்தில் அணுகும் பிரச்சனைகளை தீர்க்க முடியும். இந்த நாட்டில் பல தொழிற்சங்கங்கள் பொது மற்றும் வர்த்தக சேவைகள் சங்கம் (public and commercial services union- PCS) போன்ற மிகப்பெரிய சங்கம் தமிழ் சொலிடாரிடியின் கோரிக்கைகளுக்கு ஆதரவு வழங்கியிருக்கின்றது. மற்றும் பல சங்கங்களும் ஆதரவு வழங்கியுள்ளது.

தமிழர்கள்  தங்களின் உண்மையான நட்பு சக்தி யார் என்பதைக் காண வேண்டும். எந்தவொரு வலதுசாரிக் கட்சியும் தமிழர்களின் நலனுக்காக எப்போதும் நிற்கபோவதில்லை நின்றதுமில்லை. அது  எந்த நாடக இருந்தாலும் சரி ஒடுக்கப்படும் மக்களுக்கும் தொழிலாளர்களின் நன்மைக்கும் வலது சாரிய கொள்கை கொண்ட அரசாங்கமோ கட்சியோ ஆதரவு வழங்க போவதில்லை.

புலம்பெயர் நாட்டில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலைமை அந்நாட்டின் தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே அடையாளம் காணப்பட முடியும். சுயநிர்ணய உரிமையை அடிப்படையாகக் கொண்ட வாக்கெடுப்பு என்ற கருத்தை ஆதரிக்க வலதுசாரி அரசாங்கங்கள் அல்லது முதலாளிகளை நீங்கள் எதிர்பார்க்க முடியாது.

இருப்பினும் நீங்கள் தனி நாடு தமிழர்களுக்கு வேண்டும் என்றால் எந்தவொரு நாட்டின் வலதுசாரி அரசாங்கங்களும் முதலாளித்துவ சிந்தனைகளும் ஆதரிக்கபோவதில்லை. மாறாக எவ்வாறு எல்லாவற்றையும் தனியார்மயமாக்குதல் என்ற சிந்தனையிலேயே இருப்பார்கள். தமிழ் ஈழம் என்பது ஒரு கனவாகவே இருக்கும். எனவே, தமிழர்கள் தங்களின் இயற்கை நட்புகளை அடையாளம் காண்பது அவசியம்.

நீங்கள் கேட்கலாம் மற்ற நாடுகளில் நடக்கும் போராட்டங்களுக்கு தொழிற் சங்கங்கள் என்ன? ஏன்?  உதவியைச் செய்ய முடியும்.

தொழிற் சங்கங்கள் மிகப் பலமான புறக்கணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். தொழிற் சங்கங்கள் சனநாயக முறையில் ஒழுங்கமைக்கப்படும் அமைப்புகள். அதனால் உறுப்பினர்கள் முறைப்படி உரையாடல்களில் பங்குபற்றி தம் நலன்களுக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும், தென்னாபிரிக்காவில் நிறவெறி பாகுபாட்டுக்கு எதிராக புறக்கணிப்பு உட்பட பல்வேறு நடவடிக்கைகளை தொழிற்சங்கங்கள் முன்னெடுத்திருக்கின்றன. 2009ல் பாலஸ்தீன மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக இஸ்ரேலிய கப்பலில் இருந்து பொருட்களை இறக்க மறுத்து தொழிற் சங்கம் தனது பலத்தைக் காட்டியிருக்கிறது. மனித உரிமை மறுப்புச் செய்யும் நாடுகளுக்கு எதிரான புறக்கணிப்பு நடவடிக்கைகளை முறைப்படி முன்னெடுக்கக்கூடிய மிகப்பெரும் வலிமை தொழிற் சங்கத்திற்கு மட்டுமே உண்டு.

தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் பலம். ஆனால் அந்தப் பலத்தைப் பெறுவதற்கு நீங்கள் தொழிற் சங்கத்தில் அங்கத்தவராக வேண்டும். அதே சமயம் தொழிற்சங்க நடவடிக்கைகளில் பங்குபற்றுதல் மற்றும் அங்கத்தவர்களின் சனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காக போராடுதல் முதலிய நடவடிக்கைகள் மூலம் தொழிற்சங்கத்தை போராட்டப் பண்புள்ள தொழிற்சங்கமாக பலப்படுத்தி வைத்திருக்கும் பொறுப்ப அங்கத்தவர்களையே சாரும். இதன்மூலம் தொழிலாளர் நலன்கள் மேலும் மேலும் வலுப்பெறும்.

உங்கள் வேலை இடத்தில் பிரச்சினையா? நீங்கள் தொழிற்சங்க உறுப்பினரா?  தொழிற்சங்கத்தில் இணைய வேண்டுமா?

நீங்கள் ஒரு தொழிற்சங்கத்தில் இணைவதை யாரும் தடுத்து நிறுத்திவிடமுடியாது. நீங்கள் தொழிற் சங்கத்தில் அங்கத்தவராக சேருவது பற்றி வேலைத்தள உரிமையாளர்களுக்கு தெரிவிக்க தொழிற் சங்கம் இருக்குமாயின் அந்தச் பிரதிநிதியை நீங்கள் தொடர்புகொண்டு இணையலாம். உங்கள் வேலையிடத்தில் என்ன தொழிற்சங்கம் இருக்கிறது என தெரியாவிட்டால்  அல்லது நீங்கள் எந்த தொழிற் சங்கத்தில் சேரவேண்டும் என்ற கேள்வியிருப்பின் எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

நீங்கள் ஏன் ஒரு தொழிற் சங்கத்தில் சேரவேண்டும் – என்பதற்கான பத்துக் காரணங்கள்.

  1. உங்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும்.
  1. நீங்கள் வேலை நீக்கம் செய்யப்படுவதற்கான சாத்தியம் குறையும். தொழிற் சங்கத்தில் உறுப்பினர் இல்லாதவர்கள் இலகுவாக வேலை நீக்கம் செய்யப்படுகின்றனர்.
  1. விடுமுறை நாட்கள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. யுனைட் தொழிற் சங்கம் தமது உறுப்பினர்களுக்கு சிந்த விடுமுறை

ஊதியத்தை வென்று கொடுத்து வருகிறது.

  1. வேலைத் தளப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும், வேலைத் தளம் மூடப்படுவதட்காக, வேலையாட்கள் குறைக்கப்படுவதற்கு எதிராக தொழில் சங்கங்கள் போராடி வருகின்றன.
  1. வேலைத் தாளில் நிகழக்கூடிய நிறப்பாகுபாடு மற்றும் இன-பாலியல் முதலிய பல்வேறு பாகுபடுத்த எதிராக தொழிற் சங்கங்கள்  போராடி வருகின்றன. இவற்றுக்கெதிராக கடுமையாக சட்டங்களை கொண்டு வருவதற்கு தொழிற் சங்கங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன.
  1. சிறந்த மகப்பேறு ஓய்வு நாட்களை பெற்றுக் கொள்ளமுடியும். தொழிற் சங்கங்கதில் உறுப்பினராக இருப்பவர்கள் சிறந்த மகப்பேறு ஓய்வு நாட்களை பெறுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
  1. வேலையிடத்தில் காயப்படுவது குறைவடையும் , வேலை வழங்குபவர்கள் சரியான முறையில் பாதுகாப்பு ஒழுங்குகளைக் கடைப்பிடிக்கும்படி தொழிற் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன . ஆகையால் தொழிற்சங்க மயப்பட்ட வேலைத் தளங்களில் காயங்கள் ஏற்படுவது குறைவாக இருக்கிறது.
  1. வேலையிடத்தில் சிறந்த பயிற்சியைப் பெறும் வாய்ப்புள்ளது . பல தொழிற் சங்கங்கள் தொழிலாளர்களுக்கு பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகின்றன.
  1. வேலையிடத்தில் காயப்பட்டாலோ அல்லது தப்பித்தவறி விபத்துகள் நிகழுமாயின் அதற்கான சரியான நட்ட ஈட்டைத் தொழிற் சங்கங்கள் பெற்றுத் தர வல்லன. நட்ட ஈடு பெறும் சட்ட உதவிக்கு பல தொழிற் சங்கங்கள் பெரும்தொகை பணத்தைச் செலவு செய்து வருகின்றன.
  1. அநீதிகளை எதிர்பதற்கு உங்களது பங்களிப்பும் வழங்கப்படுகிறது . வேலைத் தளங்களில் மற்றும் நிகழும் பல்வேறு பாகுபாடுகள் மற்றும் அநீதிகளுக்கு எதிராகப் போராடி வரும் பலமான அமைப்பாக இருக்கின்றன தொழிற் சங்கங்கள் அதில் உறுப்பினராவதன் மூலம் அந்த அநீதிகளுக்கு எதிராக உங்கள் பங்களிப்பும் வழங்கப்படுகிறது.