கறுப்பு யூலையும்.இனவாத ஆட்சிகளும்.

தமிழ்பேசும் மக்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான இனக்கலவரம் மற்றும் இனவாத அழிப்புகளில்  ஒன்றுதான் கறுப்பு ஜீலை என்று அழைக்கப்படுகிறது. இலங்கை அரசியல் வரலாற்றில் அரசியல் ரீதியாக பேரினவாத சக்திகள் திட்டமிட்டு தமிழ் பேசும் மக்கள் மீது பல்வேறு தாக்குதல்களை நடாத்தி இருக்கின்றது. 36 வருடங்கள் முன் 1983 ம் ஆண்டு ஜீலை மாதம் 23ம் திகதி மற்றுமொரு இனவாத வன்முறைகள் அரங்கேறப்பட்டன. பாரிய இழப்புக்களை தமிழ் சமூகம் சந்தித்திருந்தனர் . ஒரு நாட்டுக்குள்ளே  அகதிகளாக வாழ வைத்த கொடுமையும் அவ்வாண்டில் நடைபெற்றன . சுமார் 3,000 இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். 

1983 கலவரத்த்திற்கு முன்னதாக. சிறுபான்மை இன மக்களுக்கு நடந்த துயரத்தையும் நாம் ஆழமாக பார்க்க வேண்டும்.

1915 இல் – முஸ்லிம் மக்கள் மீது ஏவப்பட்ட தாக்குதல். 

1949 இல் -மலையக  தமிழ் மக்களின் குடியுரிமை மறுப்பு.

1956 இல் -தனி சிங்கள சட்டம். 

1958 இல்- தமிழ் பேசும் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல். 

1977 இல் -நடைபெற்ற வன்முறைகள். 

1981இல் -யாழ் நூலக எரிப்பு. 

இவ்வாறு ஏற்கனவே நடந்த இன வன்முறைகளினாலும், ஒடுக்குமுறைகளாலும், பாதிக்கப்பட்ட அனுபவத்தை சந்தித்து தமிழ் பேசும் மக்கள் தமக்கான பலமான அரசியல் தளமொன்றை நிர்மாணிக்கத்தொடங்கினார்கள்,ஆனால் ஏற்கனவே தமிழர்களுக்கான பிரதிநிதிகளான தமிழ் தலைமைகளால் இவ்வாறான அடக்குமுறையை எதிர்ப்பதற்கான அரசியல் தலைமைத்துவத்தை வழங்குவதற்க்கோ அல்லது பலமான மக்கள் சக்திகளை திரட்டுவதற்கும்,  ஒருங்கிணைப்பதற்கும் அவர்களால் முடியவில்லை. அவர்களிடம் பலவீனமான அரசியல் மட்டுமே இருந்தது. 

அதன்பின் அக்கால கட்டத்தில்  சிறுசிறு ஆயுத இயக்கங்கள் உருவாகின, அவ்வியக்கங்களுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையில் மோதல்கள் வருவதுண்டு, ஆனால் அந்த இயக்கங்கள் உருவாகுவதற்கு காரணம், கொடிய அடக்குமுறைகளை எதிர்க்கவும், தமிழ்பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுக்கவுமே அவ் இயக்கங்கள் உருவாகின. அவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பலமான அமைப்பாகஉருவாக்குவதற்கு போராடி வந்தார்கள். ஆரம்பத்தில் சாதாரண சிங்கள மக்களை தாக்குவதற்கோ அல்லது  அவர்களது வாழ்க்கை இடையூறு விளைவிப்பதற்கு அவர்களுக்கு உடன்பாடு இல்லை .இவ்வாறு மக்களுக்காக போராடியவர்களை இலங்கை அரசு சிறையில் அடைத்து சித்திரவதை செய்தது.யுத்தம் முடிந்து 10 ஆண்டுகள் கடந்தும் இலங்கை அரசாங்கம் இவ்வாறான நடைமுறையைத்தான் மேற்கொண்டு வருகின்றது என்பதை நாம் கண்கூட காணமுடிகின்றது.1983 இல் ஆட்சியிலிருந்த ஜே. ஆர் ஜெயவர்த்தனவுக்கும், தற்போதய ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனவும் அரசியல்ரீதியாக ஒரு வித்தியாசமுமில்லை, ஒரே முதலாளித்துவ கையாட்களாகவே உள்ளார்கள்.  தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வையோ அல்லது   மாற்று தீர்வு ஒன்றினை முன்மொழிவதற்கு உரிய ஏற்பாடுகளோ  அவர்களிடம் இல்லை. அதை நன்றாக இக்கால கட்டத்தில் வடகிழக்கில் நடைபெறும் போராட்டங்களில் நாம் அவதானிக்க முடிகிறது.

பொதுவாக சிறு எண்ணிக்கையிலான பெளத்த இனவாதிகள் 1950களிலிருந்து தொடர்ச்சியாக தமிழ் பேசும் மக்கள்மீது தாக்குதல்கள் நடத்திவருகின்றனர். இந்த   இனவாத குழுக்களுக்கு அரசு பின்னணியில் ஆதரவு கொடுப்பது காலகாலமாக நடைபெறுகிறது. 1983 இல் நள்ளிரவில் யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலியில் நடைபெற்ற இராணுவத்திற்கும் விடுதலை புலிகள் இயக்கத்தினர்க்கும் நடைபெற்ற மோதலில்  13 ராணுவர்கள் உயிரிழந்தார்கள். மோதலை தொடர்ந்து மறுநாள் தென் இலங்கை பத்திரிகையில் இவ்வாறு செய்தி பிரசுரிக்கபடுகிறது “13 சிங்களவர்கள் கொல்லப்பட்டனர்”. மற்றும் பெளத்த இனவாதக் குழுக்கள் இனவாத தீயை நாட்டில் பல பாகங்களில் பற்ற வைக்கிறார்கள். சிங்களவர்களை தமிழர்கள் கொன்றுவிட்டார்கள், தமிழர்கள் திட்டமிட்டு சிங்களவர்கள்  அனைவரையும் அழிக்கப் போகிறார்கள்.என்று பொய்பிரச்சாரத்தை முதலில் தெற்கில் ஏற்படுத்தினார்கள். அதன்பின் கண்டி மற்றும் தமிழர்கள் வாழும் பல பிரதேசங்களுக்கு இனவாத பிரச்சாரம் பரப்பப்பட்டது. ஆனால் இலங்கை அரசாங்கமானது தனது அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து பாதுகாப்பதற்கு இவ்வாறான ஒரு சூழலை ஏற்கனவே திட்டமிட்டு எதிர்பார்த்திருந்தது. அந்த கனவு ஜுலையில் பலித்தது. அதன் நடவடிக்கைகளில் ஒன்றுதான் இறந்த இராணுத்தினர்களை கொழும்புக்கு கொண்டு வந்து ஒன்றாக அடக்கம் செய்ய உத்தரவிடப்பட்டது. பொதுவாக இறந்த இராணுத்தினர்களை அவர்களது சொந்த பிரதேசத்தில் அடக்கம் செய்வார்கள், அவசரஅவசரமாக உத்தரவு பிறப்பித்தற்கு  காரணம் பொதுமக்களிடமிருந்து ஆவேசத்தை தூண்டுவதற்காவே. 

24ஜீலை  இலங்கை தெற்கு நகரத்தில்  ராணுவ அடக்கம் செய்வதற்கு அணிதிரட்டபட்டனர், ஆனால் இறந்த இராணுவ சடலங்கள் வருவதற்கு தாமதமாகின. 

இனவாதிகளும் கூட்டத்தோடு கூட்டமாக சேர்ந்தார்கள், கூட்டத்தில் காத்திருந்த சிங்கள மக்களுக்கு பொய்பிரச்சாரத்தை பரப்பினார்கள், விடுதலை புலிகள் “அனைத்து சிங்கள மக்களையும் கொல்ல போகிறார்கள்” என வதந்திகளை கிளப்பினார்கள். 1983 ஜீலை கலவரம் வெடித்தது.இனவாத கும்பல்கள் கையில் கிடைத்த உபகரணங்கள், கத்தி, கம்புகள், பெற்றோல், எண்ணைக்கலன்கள், என்பனவற்றை பாவித்து தமிழர்களுடைய வர்த்தகநிலையங்கள், வீடுகள், வாகனங்கள் என அடித்து நொருக்கி தீயிட்டு கொளுத்தினார்கள், தமிழர்களுடைய சொத்துக்களுக்கும் உயிர்களுக்கும் சேதம் விளைவித்தனர், பார்க்கும் இடங்கள் எங்கும் அடிதடியாக இருந்தது, பெண்களை பாலியல் ரீதியாக தாக்கினார்கள், நாடே பதட்டத்தில் காணப்பட்டன. தமிழர்கள் தமது சொந்த பணத்தில் வியாபாரம் மற்றும் வாழ்க்கை நடத்தியவர்களை அடித்து விரட்டினார்கள், பல உயிர்சேதங்கள் ஏற்பட்டன. அகதி முகாமுக்குள் குடிபெயர்ந்த மக்களை கூட விட்டு வைக்கவில்லை, தேடி தேடி தாக்கினார்கள். 

தொடர்ந்து உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. ஆனால் ஜே ஆர் ஜெயவர்த்தன அதை பற்றி கவலை படவில்லை, “சண்டை என்றால் சண்டை” “சமாதானம் என்றால் சமாதானம்” என்ற பிடிவாதமாக இருந்தார், அம்மக்களின் வாக்குகளை பெற்று பதவியில் இருந்து கொண்டு படுமோசமானஅரசியல் பேசினார் அவர், இப்போதும் இலங்கையில்  இவ்வாறான சக்திகள் உள்ளன என்பதை 2009 யுத்தமுடிவில் பார்த்திருந்தோம். 

1983 யூலை  தொடர்தினங்களாக கலவரம் தொடர்வதால்  பொருளாதார சிக்கல் வந்துவிடும் என்ற நோக்கத்திற்காக மட்டுமே ஊரடங்கு சட்டம் தொடர்ந்து பிறப்பிக்கப்பட்டது. அந்த கலவரத்தை கட்டுப்படுத்த  பொலிசாரும், இராணுவமும் முன்வரவில்லை வேடிக்கை பார்த்தனர், வானத்தை நோக்கி துப்பாக்கி பிரியோகம் நடத்தவில்லை, அதற்கான காரணங்களும் உண்டு, அவ்வாறு நடைபெற்றால் சிங்கள மக்களின் ஆதரவு  முக்கியம் மற்றும் அரசு சரிந்துவிடும் என்ற எண்ணங்களும் இருந்தன. அது மட்டுமல்ல ராணுவத்தினரது மிக கொடூரமாக வட பகுதியில் பழிக்குப்பழி என்று 50க்கும் மேற்பட்ட அப்பாவி போதுமக்களைளை கண்மூடித்தனமாக கொன்றார்கள்.

ஜீலை கலவரம் நடந்து கொணடிருக்கும்போது தமிழ் மக்களுக்கு அடைக்கலமும் பாதுகாப்பும் வழங்கிய சிங்கள மக்கள் அநேகமானவர்கள் உள்ளனர். அவர்களுடைய உயிரைக் கூடப் பணயம் வைத்து, பல தமிழ்க் குடும்பங்களைப் பாதுகாத்த சிங்கள மக்கள் பலபேர் இருக்கின்றார்கள். தற்போது தமிழ்த்தேசியவாதிகள் தாம்தான் என பறைசாற்றிக்கொள்பவர்கள் இவ்வாறான  சகோதரத்துடன் பழகும் சிங்கள மக்கள் பற்றிய தவறான பதிவுகளையும் பிரச்சாரத்தயும் நிறுத்தபடவேண்டும்.ஜுலை கலவரத்தில் நடைபெற்ற மற்றுமொரு இனவாத தாக்குதல்  வெலிக்கடைச்சிறைச்சாலையில்இடம்பெற்றிருந்தன, 1983 ஜூலை 25-27 ஆம் திகதிகளில் இலங்கை அரசாங்கத்தின் அதி உயர் பாதுகாப்பு நிறைந்த வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள் சித்திரவதைகள், கொலைகள். என தொடர்ச்சியாக அதிகரித்தன. அத்தாக்குதலில் முதல் நாளில் 35 தமிழ் அரசியல்  கைதிகள் கொல்லப்பட்டனர், மிகமோசமான படு கொலைகள் வெலிக்கடை சிறைச்சாலையில் நடந்தன. என்பதையும் உறுதியாக கூறமுடியும். இனவாத கும்பல்கள் சிறையில் இருக்கும் சக சிங்கள கைதிகளுக்கு திட்டமிட்டு இனவாத மூளைச்சலவை செய்தனர். தமது வெறியை தமிழ் கைதிகள் மேல் காட்டினர்.உடனடியாக கட்டைகள், கத்திகள், இரும்புக்கம்பிகள் என்பவற்றை கொண்டு தமிழரசியல் கைதிகளை தாக்கினார்கள், நிர்வாணபடுத்தினார்கள், சித்திரவதைப்படுத்தினார்கள், கொன்றுகுவித்தார்கள். இவ்வாறான வன்முறைகளை ஏன் அதிகாரிகளால் தடுக்கமுடியவில்லை?நீதி துறையின் கட்டுபாட்டில் எவ்வாறு இவ்வாறான  அநீதிகள் நடந்தன. இவர்களுக்கு தாக்க கூடிய அதிகாரம் யார் கொடுத்தது, தாக்க கூடிய பொருட்கள் முக்கியமாக சிறைச்சாலையில் எவ்வாறு கிடைத்தது, இது திட்டமிட்டபடு  கொலைகள் என தயங்காமல் கூறலாம்.எஞ்சியிருந்த தமிழரசியல் கைதிகளையும் கொல்வதற்கு மறுநாள் தயாராகினர்கள், அச்சத்துடன் இருந்தார்கள் அக்கைதிகள்,  அவர்கள் தற்பாதுகாப்பிற்காக கையில் கிடைத் சாப்பாட்டுதட்டு போர்வை கள் என்பன வைத்திருந்தார்கள். 

இனவாதிகள் இரண்டு நாட்களின் பின்னர் காட்டுமிராண்டித்தனமாக அடித்து துன்புறுத்தினர்கள். இதில் 18 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். இனவாதிகளால் தாக்கி , மொத்தமாக 53 கைதிகள் சிறைச்சாலையில் மட்டும் கொல்லப்பட்டனர். . ஒருவாரத்தில்தமிழர்களது இரத்தங்கள்  சிந்தவைத்து குளிர்காய்ந்தஇனவாதிகள்.  இரா­ணு­வத்­தினர் உயி­ரி­ழந்­த­மைக்கும் அளிக்­கப்­பட்ட முக்­கி­யத்­துவம், பொது­மக்கள் பாதிக்­கப்­பட்ட சம்­ப­வங்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் அளிக்கப்பட­வில்லை. அந்த சம்­ப­வங்கள் பற்­றிய தக­வல்கள் இருட்­ட­டிப்பு செய்­யப்­பட்­டி­ருக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்ட ஈட்டை கொடுக்கவில்லை, இன்றுவரை சர்வதேச விசாரணைகூட நடக்கவில்லை. 

மீண்டும் ஓரு ஜுலை கலவரத்தை உருவாக்கும் பேரினவாத மற்றும் துவேச வாதிகளை நாம் இனங்கணுபோம், அச்சக்திகளைஎதிர்த்து தோழமையுடன் சிறுபான்மை இனமக்களின் உரிமைகளை வெல்வதற்கு நாம் ஐக்கியப்படுவோம்.