தமிழ் சொலிடாரிட்டி முன்வைக்கும் கோரிக்கைகள்

தற்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இந்த கொரோனா பிரச்சனையானது உலக நியதிகளில் புதிய ஒழுங்குகளை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது. 

இந்த முதலாளித்துவ சமூக கட்டமைப்பில் ஏற்படும் பெரும்பாலான பாதிப்புகள் உழைக்கும் வர்க்கத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் அதிகமாக தாக்கும் என்பதை அறிவோம். உழைக்கும் வர்க்கம் எதிர்கொள்ளும் எதிர்கொள்ளப் போகும் சிக்கல்களை எவ்வாறு முறியடிப்பது என்பதே எமது முன்னால் இருக்கும் முக்கிய கேள்வி.

வேலை செய்ய முடியாது வீட்டில் இருக்கும் தொழிலாளருக்கு 80% ஊழியம் வழங்கப்படும் என்று பிரித்தானிய அரசாங்கம் கூறியிருக்கின்றது. வீட்டு செலவுகள் அதிரித்து இருக்கும் இன்றைய நிலையில் ஊதியத்தில் 20% வெட்டுவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. இதே தொழிலாளர்களிடம் இருந்து பணம் புடுங்கும் கம்பனிகள் பல நட்டப் படக் கூடாது என அவர்களுக்கு பெரும் தொகை பணத்தை வழங்க தயாராக இருக்கும் அரசு தொழிலாளர்களின் ஊதியத்தை வெட்டுவது கேவலமான செயல். 

நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கே 80 வீத ஊதியம்தான் வழங்கப்படும் என்றால், நம்ம தமிழ் கூறும் நல் உலக பெருமக்களின் கடைகளில் என்ன நடக்கும் என்பதைக் கூறத் தேவை இல்லை.  சாதாரணமாக “தம்பி எனக்கே காசு இல்ல நாளைக்கு வாங்க பார்ப்போம் -அல்லது கொரோனா முடிஞ்சா யோசிப்போம் -நீங்க வீட்ட போங்க தம்பி” என அனுப்பிவிடுவார்கள்.  அவர்களுக்கு எவ்வாறு அரசாங்கத்திடமிருந்து நல உதவித் திட்டங்களை பெறுவது என்பது தெரியாமல் இருக்கும். அதை அவர்களுக்கு எவ்வாறு பெற்று தருவது என்பதினை அறிமுகப்படுத்த நீங்கள் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பை தொடர்பு கொள்ளலாம். சிறு வியாபாரிகள் இந்த கொரோனா நிலவரத்தால் பாதிக்கப் படக் கூடாது என்ற கோரிக்கையை தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு முன்வைத்து இயங்கி வருகிறது. அதே சமயம் சிறு வியாபார தளங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் வேலை நீக்கப் படுவதையோ அல்லது அவர்கள் ஊதியம் வெட்டப் படுவதையோ நாம் கடுமையாக எதிர்க்கிறோம். நீங்கள் தொழிற்சங்க உறுப்பினராக இருப்பின் எம்முடன் உடனடியாக தொடர்பு கொண்டு உங்கள் உரிமைகள் என்ன என்பது பற்றி அறிந்து கொள்ளுங்கள். தொழிற்சங்கத்தில் உறுப்பினர் இல்லாவிட்டாலும் எவ்வாறு ஊதியத்தை பெற்றுக் கொள்வது என்பது பற்றி எம்முடன் தொடர்பு கொண்டு உரையாடுங்கள்.

கொரோனாவுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் என்ன சம்பந்தம்? வேலை செய்யும் கம்பெனி ஊதியம் வழங்கினால் சரிதானே. ஏன் தொழிற்சங்கத்தில் இணைய வேண்டும் என்ற கேள்வியை சிலர் முன் வைப்பார்கள்.

மற்றும் தொழிற்சங்கம் எவ்வாறு எமது ஊதியத்தைப் பெற்றுத் தரும் என்றும் ஒரு கேள்வி உள்ளது.

தொழிற்சங்கங்களின் முக்கிய பங்கு உறுப்பினர்களின் நலன்களை பாதுகாத்தல். உயர் ஊதியங்களை பெறுதல் மற்றும் உறுப்பினர்களின் நலனை உறுதி செய்வதல் என்பதற்கு தொழிற்சங்கம் பாடு பட்டு வருகிறது. இது மட்டுமின்றி பணியிடத்தில் நியாயமற்ற பணி நீக்கத்திற்கு எதிராக உறுப்பினர்களை பாதுகாப்பதற்கும் வேலை பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கின்றது. சட்ட ஆலோசனைகளை வழங்குகிறது. தொழிலாளர்கள் கூட்டாக இணைந்து தமது ரிமை கோரிக்கைகளை முன் வைப்பது அவர்தம் கோரிக்கைகளை பலப்படுத்தி அதை வெல்வதற்கான சாத்தியத்தை அதிகரிக்கிறது. நீங்கள் வேலை செய்யும் வேலை தளத்தில் தொழிற்சங்கள் இல்லை என்றால் அங்கிருக்கும் தொழிலாளர்கள் எவ்வாறு தொழிற்சங்கத்தில் இணைவது என்பது பற்றி அறிய தமிழ் சொலிடாரிட்டியுடன் தொடர்பு கொள்ளுங்கள். உங்களின் தொழிற்சங்க பிரதி நிதி தமது வேலையை சரிவர செய்யாத ஒருவராயின் நீங்கள் உங்கள் பிராந்திய அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியும். எல்லா தொழிற் சங்கங்களும் – அதன் தலைமை உறுப்பினர்களும் தொழிலாளர் நலன்களை முதன்மைப் படுத்தி இயங்குவதாக நாம் சொல்லவில்லை. ஆனால் அது அவர்கள் கடமை – அதற்கான போராட்டத்தை – செயற்படுத்தலை நாம் முன்னெடுக்க முடியும். தமிழ் சொலிடாரிட்டி உங்கள் பிரச்சினைகளை தொழிற் சங்கத்துடன் பதிவு செய்ய உதவ முடியும். 

தமிழ் சொலிடாரிட்டி முன் வைக்கும் கோரிக்கைகளில் சில பின்வருமாறு:

  1. தொழிலாளர் பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்த வேண்டும். அதாவது தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கு.
  2. எல்லாருக்குமான கொரோனா பரிசோதனையை வழங்கு.
  3. முற்றிலும் இலவச சுகாதார துறையை மேலும் விரிவு படுத்தும் முதலீடு செய். அனைத்து தனியார் மயப்படுத்தப்பட்ட பகுதிகளையும் மீண்டும் தேசிய மயப்படுத்து.
  4. சுகாதார துறையில் வேலை செய்யும் அனைத்து தொழிலாளர்களினதும் சுகாதாரத்தை – பாதுகாப்பை உறுதிப்படுத்து – அதற்கு தேவையான அனைத்து முதலீட்டையும் எவ்வித தாமதமும் இன்றி செய். 
  5. 100 வீதம் ஊதியம் வழங்கு. எக்காரணம் கொண்டும் ஊதியத்தை வெட்டாதே.
  6. வேலை நீக்கம் செய்யாதே.
  7. சிறு தொழில் வியாபாரிகள் மற்றும் சுய தொழில் செய்வோர் எவ்வித நட்டத்தையும் சந்திக்காமல் இருக்க தேவையான நட்ட ஈட்டை வழங்கு.
  8. வேலை அற்றோர் மற்றும் வேலை செய்ய முடியாதோருக்கு தேவையான முழு பண உதவிகளையும் வழங்கு.
  9. ஓய்வூதியம் பெறுவோருக்கு தேவையான மேலதிக பண உதவி – சுகாதாரப் பாதுகாப்பு – மற்றும் உணவைப் பெறும் வசதிகளை உடனடியாக வழங்கு.
  10. மின்சாரம் முதற்கொண்டு பல்வேறு வீட்டு கட்டணங்களை தற்காலிகமாக என்றாலும் ரத்துச் செய்.
  11. வீடு வாடகை மற்றும் மோர்கேஜ் ஆகியவற்றை தற்காலிகமாக என்றாலும் ரத்துச் செய்.
  12. தேவையான மொழிபெயர்ப்பு சேவைகளை வழங்கு.
  13. அகதி கோரிக்கையாலர்களுக்கு வழங்கும் உதவித் தொகையை அதிகரி. தற்போது வழங்கப் படும் சொற்ப பணத்தில் வாழ்வது சாத்தியமில்லை. ஒரு சாதாரண தொழிலாளருக்கு வழங்கப்படும் ஊதியத்தை உதவி தொகையாக வழங்கு.
  14. தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப் பட்டிருக்கும் அனைத்து அகதிகளையும் உடனடியாக விடுதலை செய். அவர்களுக்கு தேவையான தாங்கும் வசதி, சுகாத் உணவு வசதி, மற்றும் சுகாதார பரிசோதனை ஆகியவற்றை உடனடியாக வழங்கு.
  15. வேலை செய்யும் உரிமை மறுக்கப்பட்டு இருக்கும் அனைவருக்கும் தேவையான மாதாந்த உதவிப் பணத்தை உடனடியாக வழங்கு. 

பெரும் வியாபாரங்கள்- கம்பனிகள் கொரோனா நெருக்கடியிலும் பெரும் லாபம் ஈட்டுவதை தடை செய்ய வேண்டும். அவ்வாறு லாப மீட்ட முயற்சி செய்யும் அனைத்து கம்பனிகளையும் தேசிய மயப்படுத்த அரசு முன் வர வேண்டும். இத்தருனத்தில் உருவாகும் அனைத்து லாபங்களும் மக்கள் நல சேவைக்கு முதலீடு செய்யப்பட வேண்டும்.

தமிழ் சொலிடாரிட்டி தொழிற்சங்கதோடு இணைந்து தொழிலாளர்களின் பாதுகாப்புக்கும் -முழுமையான ஊதியத்தை வழங்குவதற்கும் – மற்றும் தனியார் கம்பனிகளை தேசிய மயபடுத்துவதற்கும் அவற்றை ஜனநாயக முறைப்படி அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் போராடிக் கொண்டிருக்கிறது.

போராடாமல் எதுவும் வெல்லப்பட்டதாக வரலாறு இல்லை. தமிழ்  சொலிடாரிட்டியுடன் இணைந்து இன்றே உங்களின் போராட்டத்தை தொடரவும்.

நீங்கள் ஒரு தொழிற்சங்கத்தில் இணைவதை யாரும் தடுத்து நிறுத்திவிடமுடியாது. நீங்கள் தொழிற் சங்கத்தில் அங்கத்தவராக சேருவது பற்றி வேலைத்தள உரிமையாளர்களுக்கு தெரிவிக்கவேண்டியதில்லை. தொழிற் சங்கம் இருக்குமாயின் அந்தப் பிரதிநிதியை நீங்கள் தொடர்புகொண்டு இணையலாம். உங்கள் வேலையிடத்தில் என்ன தொழிற்சங்கம் இருக்கிறது என தெரியாவிட்டால்  அல்லது நீங்கள் எந்த தொழிற் சங்கத்தில் சேரவேண்டும் என்ற கேள்வியிருப்பின் எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

மேற்சொன்ன கோரிக்கைகளுடன் உங்களுக்கு உடன்பாடு என்றால் எங்களோடு தொடர்பு கொண்டு உங்கள் ஆதரவை பதிவு செய்யுங்கள். 

மேற்சொன்ன கோரிக்கைகளை மக்கள் மத்தியில் – தொழிலாளர் மத்தியில் எடுத்துச் செல்ல உங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யுங்கள். 

தொடர்புகளுக்கு 

கேதீஸ்  07540095113

லாவண்யா  lawanya@tamilsolidarity.org

E-mail us on : join@tamilsolidarity.org