வீட்டு நெருக்கடிக்கு எதிராக போராட்டம். அனைவரும் கலந்துகொள்ளுங்கள்

869 . Views .

வீட்டு நெருக்கடிக்கு எதிராக போராட்டம். அனைவரும் கலந்துகொள்ளுங்கள்

லண்டனில் மற்றும் வீட்டு நெருக்கடிகளுக்கு எதிராக உதவி செய்துவரும் தொழிலாளர்கள் ஏப்ரல் 17 சனிக்கிழமை “வெளியேற்றங்களை நிறுத்து! கடன்களை கைவிடு!” என்ற கோரிக்கையுடன் போராட்டம் ஒன்றை ஒழுங்கு செய்திருக்கிறார்கள்.

இந்த போராட்டத்தை சோசலிஸ்ட் கட்சி மற்றும் பொது தொழிற்சங்க யுனைட்டின் வீட்டுத் தொழிலாளர் கிளை மற்றும் லண்டன் ரெண்டர்ஸ் யூனியனின், Social Housing Action Campaign (SHAC) ஆகியன ஒன்றுசேர்ந்து நடத்த இருக்கின்றன.

குறைந்த ஊதியத்தில் இருக்கும் தொழிலாளர் மற்றும் இளையோருக்கு  வீட்டு வசதி என்பது பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. இது தொற்றுநோய் காலத்தில் மேலும் மோசமடைந்துள்ளது. இதனால் வீட்டுக் கடன்கள் உயர்ந்துள்ளன. வாடகைக்கு இருப்போர் பலர் வெளியேற்றப்படுவதற்கான ஆபத்து மற்றும் கடன் பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோர் இந்த காலகட்டத்தில் வாடகை அல்லது தங்குமிடங்களுக்கு எந்த உதவியும் பெறவில்லை. பலர் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் உதவியை நாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பெருவணிகங்கள் அரசாங்கத்தால் பிணை எடுக்கப்பட்ட அதேசமயம் வசதி அற்ற பெரும்பான்மையினர் கைவிடப்பட்டுள்ளனர்.

பல தமிழர்கள், குறிப்பாக வாடகைக்கு இருப்போர் மற்றும் புகலிடம் கோருவோர், முறையான வீட்டுவசதி அல்லது வாடகை விதிமுறைகள் இல்லாததால் ஏராளமான சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்தச் சூழ்நிலையால் உருவாக்கப்பட்ட நிச்சயமற்ற தன்மை தமிழ் சமூகத்தில் மோசமான மன ஆரோக்கியம் மற்றும் பிற பிரச்சினைகளுக்கு பங்களித்துள்ளது. வீட்டுவசதிக்கான பிரச்சாரத்தையும், போராட்டத்தையும் தமிழ் சொலிடாரிட்டி  முழுமையாக ஆதரிக்கிறது. ஏப்ரல் 17 போராட்ட நடவடிக்கை முன் வைக்கும் கோரிக்கைகளையும் தமிழ் சொலிடாரிட்டி முழுமையாக ஆதரிக்கிறது.

பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன 

கோரிக்கைகள்: 

  • வீட்டை விற்று வெளியேற்றம் செய்வதை நிறுத்து  
  • கடன்களை கைவிடு 
  • மேலதிக கவுன்சில்  வீடுகள் கட்டப்படவேண்டும் 
  • ஜனநாயக ரீதியாக வாடகையை தீர்மானிக்கும் நடைமுறை அறிமுகப்படுத்து. 
  • அனைவருக்கும் பாதுகாப்பான வாடகை முறை அமுல்படுத்து 
  • மிரட்டி பணம் பறித்தல் இல்லாமல் வெளியேறும் உரிமை வழங்கு 

சமூக இடைவெளியுடன் பாதுகாப்பு உபகரணங்களுடன் ஆறு பேர் கொண்ட குழுக்களாக போராட்டத்தில் கலந்துக்கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.

 

நாள் – ஏப்ரல் 17 சனிக்கிழமை  

நேரம்  1 மணி  

நடைபெறும் இடம் – பௌன்றி எஸ்டேட் (Boundary Estate in Shoreditch, east London).  

இதில் கலந்து கொண்டு வீட்டு வசதிகளுக்கான போராட்டத்தைப் பலப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புகளுக்கு :  

லாவண்யா: 07809269672

lawanya@tamilsolidarity.org