தமிழ் சொலிடாரிடி அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டம்

479 . Views .

 தமிழ் சொலிடாரிடி அமைப்பின் வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த 11ஆம் திகதி டிசம்பர் மாதம் 2021 அன்று லண்டனில் நடைபெற்றது. தற்போதைய கொரோனா  நெருக்கடி காலங்களுக்குப் பின்னர் உறுப்பினர்கள் அனைவரும் நேரடியாக கலந்துகொள்ளும் ஒரு கூட்டமாக இந்த கூட்டம் அமைந்திருந்தது.  இந்த கூட்டம் இரண்டு அமர்வுகளாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. முதலாவது அமர்வு அமைப்பு சார் கூட்டமாகவும், இரண்டாவது அமர்வு அரசியல் கலந்துரையாடலாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முதலாவது அமர்வில்  

தமிழ் சொழிடரிடி அமைப்பு  கடந்த வருடத்தின் சிக்கலான சூழ்நிலையிலும் என்ன என்ன வேலைதிட்டங்களை செய்து இருக்கின்றது என்பது தொடர்பான அறிக்கைகள் உறுப்பினர்களுக்கு சமர்ப்பிக்க ப் பட்டது.  கடந்த வருடத்திற்கான நிதி அறிக்கையினை எமது அமைப்பின் சுயாதீன கனக்காளர் மாக்கிரட் அவர்கள் சமர்ப்பித்தார். அறிக்கைகள் வருகைதந்த உறுப்பினர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

 அதனை தொடர்ந்து  தமிழ் சொலிடரிட்டி அமைப்பின்  அடுத்த வருடத்திற்கான நிர்வாகக்குழு தேர்வு நடைபெற்றது. பிரேரிக்கப்பட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் அனைவரும்  உறுப்பினர்களால் ஒருமனதாக அங்கிகரிக்கப்பட்டார்கள். 

இரண்டாவது  அமர்வில் 

இலங்கை தெற்காசியா மற்றும் பிரித்தானியாவின் இளைஞர்கள் எழுச்சி என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. இலங்கை மற்றும் தெற்காசியாவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் மாற்றங்கள் ,நெருக்கடிகள் தொடர்பான கருத்துக்களை  சர்வதேச ஒருங்கிணைப்பாளர் சேனன்  அவர்கள் வழங்கினார் . உலகின் குறிப்பாக பிரித்தானியாவின் அரசியல் மாற்றங்கள் மற்றும் மாற்று அரசியலுக்கான வாய்ப்புக்கள் தொடர்பாக சோசலிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர்  ஹனா செல்  அவர்கள் தனது கருத்துக்களை தெரிவித்தார் இதைத்தொடர்ந்து கலந்து கொண்ட உறுப்பினர்களுக்கான கேள்வி-பதில் நிகழ்வுகள் நடைபெற்றது.