நவம்பர் 6 சனிக்கிழமையன்று, கிளாஸ்கோவில் உலகளாவிய COP26 உச்சிமாநாடு நடந்து கொண்டிருக்கும் வேளையில் லன்டனில் தமிழ் சொலிடாரிடியானது தமிழ்மக்களை ஒருங்கினைத்து காலநிலை மாற்றத்துக்கு ஏதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கானவர்களுடன் இணைந்து போராடியது.
COP26 மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கை ஜனதிபதி கோத்தபாய ராஜபக்ச காலநிலை மாற்றத்தை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு தான் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கூறி இருக்கின்றார். ஆனால் உண்மையில் கோத்தபாய தமிழர்களை கொத்து கொத்தாக கொலை செய்தவர் மாத்திரம் அல்ல. இலங்கையின் இயற்கை வளங்களையும் அழித்து கொண்டு இருக்கும் ஒருவர் . அவர் மனித குலத்துக்கு எதிரான ஒருவர். அவர் ஸ்கொட்லாந்துக்கு வந்தவுடன் கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் சொலிடாரிடி முன் வைத்தது.
லன்டனில் Bank of England க்கு முன்னால் ஆரம்பித்த பேரனி trafalgar squareக்கு முன்னால் நிறைவு பெற்றது. போராடத்தில் கலந்து கொண்ட தமிழ் சொலிடாரிடி “காலநிலைக் குற்றவாளி – இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச”, “கோத்தபாய – மனித நேயத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் எதிரான குற்றவாளி”, “இலங்கை ஜனாதிபதி மக்களைக் கொல்கிறார்” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி இருந்தனர்.
காலநிலை மாற்றம் மிக முக்கிய பிரச்சனையாக உருவேடுத்து இருக்கின்றது. இதற்கு தீர்வுகான தமது லாப வேட்டைக்காக இந்த இயற்கையை சூறையாடும் முதலாளித்துவ த்தின் பிரதிநிதிகள் ஒன்று கூடி இருப்பது முரன் நகையான விடயம். காலநிலை மாற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர இந்த முதலாளித்துவ உற்பத்தி முறையால் ஒருபோதும் முடியாது. இயற்கையின் மீது கரிசனம் உள்ளவர்கள் மாற்று உற்பத்தி முறையை நோக்கி நகரவேண்டும்.