வெற்றிகரமான சர்வதேச சொலிடாரிட்டி  நடவடிக்கை அறிக்கைகள் (படங்கள் மற்றும் வீடியோக்கள் சேர்க்கப்பட்டுள்ளது)

1,580 . Views .

மாணவர் தலைவர்களான வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் உட்பட அனைத்து எதிர்ப்பாளர்களின் விடுதலை, ஆர்ப்பாட்டம் செய்வதற்கான  உரிமை, ஒன்று கூடும் உரிமை, பேச்சு சுதந்திரம் , பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குத்தல் போன்ற அடிப்படை ஜனநாயக உரிமைகளை கோரி இலங்கையிலும் சர்வதேச அளவிலும் நவம்பர் 9 அன்று போராட்டங்கள் நடத்தப்பட்டன. பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம் (IUSF), புதிதாக உருவாக்கப்பட்ட மக்கள் பேரவைக்கான இயக்கம் (MPC) உடன் இணைந்து தேசிய நடவடிக்கை தினம் மற்றும் சர்வதேச சொலிடாரிடி நடவடிக்கைகளை ஒன்பதாம் திகதி நடத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளது. அனைத்து அடக்குமுறைகளையும் எதிர்ப்பதற்காக இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைகள் ,ஜனநாயக உரிமைகள் என்பனனவற்றை வெல்வதற்கான மக்கள் பலத்தை கட்டிஎழுபுவதில் உறுதியாக நிற்கின்ற தமிழ் சொலிடாரிடி இந்த எதிப்பு நடவடிக்கையில் இணைந்து கொண்டது. ஜனநாயக உரிமைகள் உட்பட அனைத்து உரிமைகளை வெல்வதற்கான சர்வதேச தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும்  CWI சர்வதேச நடவடிக்கைக்கான இந்த அழைப்பை முழுமையாக ஆதரித்தது மற்றும் பல நாடுகளில் எதிர்ப்புகளைத் திரட்ட உதவியது.அத்தோடு லண்டன் போராட்டடத்தில் சோசலிஸ்ட் கட்சி , சோசலிஸ்ட் மாணவர்கள் , மக்கள் போராட்டத்திற்கான இயக்கம் ஆகியன கலந்து கொண்டன.

 

அன்றைய செய்தி தெளிவாக இருந்தது: “அரசினால் அதிகரிக்கும் அடக்குமுறை எதிர்ப்புகளை மேலும் மக்கள் போராட்டங்களை அதிகரிப்பதன் மூலம் எதிர்கொள்ளப்படும், மேலும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகள் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட அணுகுமுறை முலம் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒழுங்கமைக்கின்றார்கள் ” என்று லண்டனில் ஆர்ப்பாட்டக்காரர்  ஒருவர் கூறினார். ஜூலை மாதம் இடம்பெற்ற கிளர்ச்சி மீண்டும் நிகழும் என்ற அச்சத்தில் அனைத்து எதிர்ப்பு நடவடிக்கைகளையும் நசுக்க இலங்கை அரசாங்கம் கொடூரமான வழிமுறைகளை அமுல்படுத்தி வருகிறது. வாழ்க்கை தரத்தின்  மீதான தாக்குதல்கள் மற்றும் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிப்பு ஆகியவை நெருக்கடிக்கு தீர்வாக அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட முக்கிய திட்டத்தின் ஒரு பகுதியாகும். எழக்கூடிய எந்த எதிர்ப்பையும் கொடூரமாக அடக்குவதன் மூலம் இதைச் செய்ய அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

 

முக்கிய பகுதிகளில் போராட்டம் நடத்த அரசு தடை விதித்து ஆயிரக்கணக்கானோரை கைது செய்துள்ளது. எனினும், சமூகத்தில் நிலவும் பாரிய கோபத்தினால் தொடர்ந்து வெளிவரும் எதிர்ப்புகளை அவர்களால் முழுமையாக அடக்க முடியவில்லை. அடக்குமுறையை மீறி, நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் பலர் கலந்து கொண்டனர். இது லண்டன், ஜெர்மனி, இந்தியா மற்றும் பல நாடுகளில் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்புகள், நடவடிக்கைகள் மற்றும் ஆன்லைன் பிரச்சாரங்களுடன் சேர்ந்து கொண்டது.