மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்சார சபையின் முன்மொழிவின்படி, இன்று (பிப்ரவரி 15) முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணங்கள் கிட்டத்தட்ட 66% அதிகரிக்கப்படும்.
அடுத்த லைட்பில்லுக்கா நான்!
எலக்ரிக் மீட்டர் சுற்றாமல்
வழி தேடுகிறேன்! வீட்டின்
சுவிட்ச் போர்டில் எல்லாம்
அடிக்கடி ஓப் லைன் பார்க்கிறேன்!
ரைஸ் குக்கரில் அரிசி
வேகும் நேரம் மனம்
நொந்து நூடில் ஆகிறது!
மின்விளக்கை பார்க்கும் போது
தோமஸ் அல்வா எடிசனுக்கு
அறையனும் போலிருக்கு!
மின்விசிறி சுற்றும் போதும்
வியர்த்துக் கொட்டுகிறது!
குளிர்சாதனப் பெட்டிக்கு
குட்பை சொல்ல வழியில்லையா!?
சலவை இயந்திரம் இயங்கும்
நிமிடங்களில் வயிற்றில்
புளி கரைப்பது போலிருக்கே!
போன் சார்ஜ் இறங்காமல்
டேட்டாவை கட் பண்ணுகிறேன்!
டீ. வி பார்ப்பதில்லை
லாப்டொப்பை தெடுவதில்லை!
கசங்கிய சட்டை போதும்
அயன் பாக்ஸ் தேவையில்லை!
அவண், மைக்ரோ வேவ் எல்லாம்
பென்டி கப்பேர்ட் ஆக்கிவிட்டேன்!
ஐஸ் கட்டி இல்லாமல்
யூஸ் பருகக் கற்றுக் கொண்டேன்!
வெளிச்சத்தை விரட்டிவிட்டு
இரவில் இருட்டைக் காதலிக்கிறேன்!
வீட்டுக்குத் திருடன் வந்தால்
எலக்ரிக் அயிட்டங்களை இனி
அன்பளிப்பாய் கொடுப்பேன்!
பாவம் அவன் அடுத்த லைட் பில்
கண்டதும் செத்துப் போய்விடுவான்!
நிச்சயமாக இதற்குப் பேரும்
தக்கன பிழைத்தல்தான்
எம்.யூ.அப்துர் ரஹீம்