அகதிகளுக்கு எதிரான அதிதீவிர வலதுசாரிகளின் தாக்குதல்

லிவர்பூல் அருகே உள்ள சூட்ஸ் ஹோட்டல் நோஸ்லிக்கு வெளியே போலீஸ் வேன் தீப்பிடித்து எரிந்ததால் சம்பவ இடத்தில் கலக தடுப்பு போலீசார்
484 . Views .

பிரித்தானியாவில் கிர்க்பியில் உள்ள சூட்ஸ் ஹோட்டலுக்கு வெளியே புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் மிரட்டல் காட்சிகள் நாடு முழுவதும் உள்ள உழைக்கும்  மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. தேசபக்தி மாற்று (Patriotic Alternative ) என்ற தீவிர வலதுசாரிக் குழு பிப்ரவரி 10 அன்று அகதிகளுக்கு எதிரான வன்முறையைத் தூண்டும் நோக்கத்துடன், ஹோட்டலில் இறங்கியது, அனால் அந்த கும்பல் உள்ளூர்வாசிகளின்  அமைதியான எதிர்ப்பு போராட்டத்தை சந்திக்கவேண்டி இருந்தது .

இந்தத் மிலேச்சத்தனமான தாக்குதல்களை  அனைத்து முதலாளித்துவ ஸ்தாபனக் கட்சிகளின் அரசியல்வாதிகளும் வழமை போல் பாசாங்குத்தனமாக தமது கண்டனத்தை தெரிவித்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால்  கண்டித்தவர்களில் டோரியின் உள்துறை செயலர் சுயெல்லா பிரேவர்மேனும் அடங்குவர். அவர் தனது பதவியை புலம்பெயர்ந்தோரை அரக்கத்தனமாகப் அடக்குவதற்கு பயன்படுத்துபவர். அவரின் பிரபல வார்த்தை  “the invasion on our southern coast”  அதாவது அகதிகள் ” எங்கள் தெற்கு கடற்கரையில் படையெடுப்பை மேற்கொண்டியிருக்கின்றார்கள் ” என்று விவரித்தார்.

இன்று உலகம் முழுவதும் வாழ்கை செலவு அதிகரித்து இருப்பது போல பிரித்தானியாவிலும் மிகவும் அதிகரித்து இருக்கின்றது. இதற்கு எதிராக ஒவ்வொரு நாளும் மக்கள் போராட்ட்ங்களை ஒழுங்கமைக்கின்றார்கள். வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளர்கள் ஒன்றுபடும் நேரத்தில், டோரிகள் சமூகங்களில் இனவாதப் பிரிவினையைத் தூண்ட முயற்சிக்கின்றனர். இன்று பிரித்தானியாவில் ஏற்பட்டது இருக்கும் வீட்டு வசதி இன்மை பொது சேவைகளின் பற்றாக்குறை என்பன இந்த நீல , சிவப்பு டோரிகளின் அரசியல் மற்றும் பொருளாதார கொள்கைகளால் ஏற்பட்டவை. ஆனால் அவர்கள் இவற்றுக்கான காரணமாக குடியேற்றவாசிகளை கைகாட்டுகின்றார்கள்.இதையே இங்கு இருக்கும் வெகுஜன வலது சாரி பத்திகைகளும் முன்வக்கின்றன.   

தீவிர வலதுசாரி இனவெறி தீவிரவாதிகள் டோரிகளின் கீழ் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான தாக்குதல்களை நடத்த தங்கள் தைரியமாக நடத்த முடியும் என உணர்கிறார்கள்  என்பது தெளிவாகிறது. கிர்க்பியில் நடத்தப்பட்ட தாக்குதல், கடந்த ஆண்டு டோவரில் உள்ள புகலிட மையத்தின் மீது பெட்ரோல் குண்டுவீச்சு முயற்சி உட்பட, பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான இனவெறி தாக்குதல்கள், புலம்பெயர்ந்தோருக்கு எதிரான இனவெறி தாக்குதல்கள் மற்றும் மிரட்டல் முயற்சிகளில் மிக சமீபத்திய உதாரணங்கள்.

டோரிகள் மற்றும் தொழிலாளர் கட்சி 

ஆனால் அதற்கு டோரி அரசாங்கம் மட்டும் பொறுப்பல்ல. நாடுகடத்தலை முடுக்கிவிடுமாறு தொழிலாளர் கட்சி டோரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது!, பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவேண்டும் , ​​உழைக்கும் தொழிலாளிகள்  இந்த பொருளாதார சமூக நெருக்கடிக்கான விலையை  செலுத்த வேண்டும் என்ற கருத்தையே  சிவப்பு டோரி  ஸ்டார்மர்ஸ்இன்  தொழிலாளர் கட்சியும் கொண்டிருக்கின்றது.

பிரித்தானியாவில் மிகவும் அதிகமான வறுமையான நகரங்களில்  கிர்க்பியும் இருக்கின்றது. கிர்க்பி நகர் இருக்கும் நோஸ்லி கவுன்சிலை 1973ல் இருந்து தொழிலாளர் கட்சி தனது கட்டுப்பாட்டடில் வைத்து இருக்கின்றது  – மேலும் பல ஆண்டுகளாக டோரிக்கள்மிருகத்தனமாக கவுன்சில்களுக்கான நிதியை குறைப்பதுக்கான மசோதாக்களுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. இது மார்கரெட் தாட்சரின் டோரி அரசாங்கத்தின் தாக்குதல்களை முறியடிக்கவும் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்க சமூகங்களின் ஐக்கியப்பட்ட வெகுஜன இயக்கத்திற்கு வழிவகுத்த 1980 களில் போராளிகள் தலைமையிலான லேபர் லிவர்பூல் நகர சபைக்கு இது முற்றிலும் முரணானது.

(1980 மிலிட்டன் லீவர்பூல் போராட்டம் தொடர்பான கட்டுரையை விரைவில் தருகின்றோம்)

நோஸ்லி கவுன்சில் தனது பட்ஜெட்டில் இருந்து  தேசிய சராசரியான £188 உடன் ஒப்பிடும்போது, ​​ஒரு குடிமகனுக்கு £485 குறைத்திருக்கின்றது. இதற்கு உள்ளூர் மக்கள் கோபப்படுவதில் ஆச்சரியமில்லை.

அன்றாடம் உழைத்து வரிகட்டும் மக்களுக்கான  சேவைகளும் கொடுப்பனவுகளை இவ்வாறு குறைக்கப்பட  பெரும்பாலும் வரிஏய்க்கும் , பிரிட்டனில் உள்ள பணக்கார 250 தனிநபர்கள் இப்போது 710 பில்லியன் பவுண்டுகளை வைத்துள்ளனர், இது 2021 இல் 658 பில்லியன் பவுண்டுகளாக இருந்தது. இந்த குறை நிரப்பு நிதிக்கு பில்லியனர்கள் தான்  பணம் கொடுக்க வேண்டும் மறாக்க நாங்கள் அல்ல !

பிரித்தானிய தேசிய கொடி ஏந்திய அதி தீவிர வலதுசாரிகள் அகதித்தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு எதிரான போராட்டத்தில்

என்ன திட்டம் தேவை

பெப்ரவரி 10 அன்று சூட்ஸ் ஹோட்டலுக்கு வெளியே நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள சுமார் 450 பேரை வற்புறுத்தி திரட்டுவதற்கு சிறிய தீவிர வலதுசாரி ‘தேசபக்தி மாற்று’குப்பலால் முடிந்துள்ளது. 100க்கும் குறைவானவர்களே அதன் சொந்த ஆதரவாளர்கள், இவர்கள் இங்கிலாந்தின் வடக்குப் பகுதியிலிருந்து திரட்டப்பட்டனர்.

பிப்ரவரி 10 அன்று சூட்ஸ் ஹோட்டலில் குறுகிய அறிவிப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட துணிச்சலான, இனவெறிக்கு எதிரான, எதிர்-டெமோ – அந்த கும்பலை விட அதிகமாக இருந்தது, இது தொழிற்சங்க இயக்கம் முன்னணியில் இருக்க வேண்டிய இன்றியமையாத தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இனவெறி மற்றும் தீவிர வலதுசாரிகளுக்கு எதிரான போராட்டமானது இனவெறி வளர அனுமதிக்கும் நிலைமைகளுக்கு எதிரான போராட்டத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

போராட்டத்திற்கு முந்தைய நாட்களில் கிர்க்பியில் உள்ள வீடுகளுக்கு தேசபக்தி மாற்று (Patriotic Alternative ) மூலம் விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள், குளிர்காலத்தில் மக்களை உறைய வைக்கும் வாழ்க்கைச் செலவு நெருக்கடியைக் குறிப்பிடுகின்றன அதற்கு காரணம் புலம்பெந்தவர்கள்தான் என துவேசத்தை தூண்டுகின்றார்கள் . ஆனால், தொழிற்சங்க இயக்கத்தின் பல்வேறு பின்னணியில் உள்ள தொழிலாளர்கள்தான் தற்போது வேலைநிறுத்த அலையில் முன்னணியில் உள்ளனர் – முதலாளித்துவத்தால் உந்தப்படும் வாழ்க்கைச் செலவு மற்றும் எரிசக்தி நெருக்கடிக்கு எதிரான மிக சக்திவாய்ந்த போராட்டம்.

அனைவருக்கும் வேலைகள், வீடுகள் மற்றும் சேவைகளுக்கான ஐக்கிய தொழிற்சங்க இயக்கத்தை உருவாக்க வேண்டி இருக்கின்றது. அது தீவிர வலதுசாரிகளின் ஆதரவைக் குறைக்க மிகச் சிறந்த வழியாக அது இருக்கும். அகதிகள் மற்றும் தற்போதுள்ள மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு நமது உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தேவையான வளங்களையும் இத்தகைய பிரச்சார இயக்கம் கோரவேண்டும்.

தொழிலாளர்களுக்கு அரசியல் குரல் தேவை

வளர்ந்து வரும் வேலைநிறுத்த அலையால் டோரி ஆட்சி தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது. எனவே, வாழ்க்கைத் தரம் வீழ்ச்சியடைவதற்கான உண்மையான காரணங்களில் இருந்து உழைக்கும் மக்களை திசைதிருப்ப முயலும் டோரிகள் மீண்டும் குடியேற்றத்தைக் குறைகூறத்தொடங்கி இருக்கிறார்கள்  என்பதில் சந்தேகமில்லை. ஆனால், தொழிலாளர்கள் மற்றும் அகதிகளின் இந்த நிலைமை மீது தாக்குதல் நடத்துவதில் டோரிக்கள் , லிபிரல்கள் மற்றும் சிவப்பு டோரி  ஸ்டார்மரின்  தொழிலாளர் கட்சி என  மக்களின் சேவைகள் மற்றும் கொடுப்பனவுகள் மீதான சிக்கனச் சார்புக் கட்சிகளுக்கு மாற்றாக என்ன அரசியல் மாற்று உள்ளது?

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்காக ஒரு புதிய அரசியல் குரலை நிறுவ தொழிற்சங்கங்கள் இப்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதியில் இயங்கும் சோசலிஸ்ட் கட்சி கூறுகிறது. அதுவே  இனவெறி பலிவாங்கலுக்கு எதிராகவும், முதலாளிகள் மற்றும் முதலாளித்துவ அரசியல்வாதிகளின் அனைத்து தாக்குதல்களுக்கும் எதிராகவும் உறுதியாக நிற்க முடியும்.

உள்ளாட்சித் தேர்தல்களிலும் அடுத்த பொதுத் தேர்தலிலும் தொழிலாளர்களின் வேட்பாளர்களை நிறுத்துவதே தொடக்கப் புள்ளியாக இருக்கும். 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது, ஆனால் மிக விரைவில் நடைபெறலாம்.

தற்போது வாழ்கை செலவு நெருக்கடிக்கு எதிராக போராடடத்தில் உள்ள தொழிலாளர்களில்  ஒரு பகுதியினர் மட்டுமே தொழிலாளர்களின் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டாலே , வரவிருக்கும் முக்கியமான மக்களின் போரில்  தங்கள் பக்கம் தேவைப்படும் வெகுஜன அரசியல் பலத்தை தொழிலாளர்கள்  கட்டியெழுப்புவதற்கான அடித்தளத்தை அமைக்க உதவும்.

இது சமூகம் முழுவதற்கும் இனவெறிக்கு எதிரான போராட்டத்தில் இது ஒரு பெரிய படியாக இருக்கும். ஆனால் முதலாளித்துவ அமைப்புக்குள் இனவாதப் பிளவு என்பது இயல்பாகவே உள்ளது – ஏன்னெனில் இது சமூகத்தின் மிக மிக சிறிய அளவினாலான  பெரும் பணக்காரர்களால் சமூகத்தின்  செல்வம் பதுக்கி வைக்கப்படும்வதற்கும் , எஞ்சியிருக்கும் நொறுக்குத் தீனிகளுக்காக மற்றவர்கள் நமக்குள் சண்டையிவதை தூண்டும் அமைப்பு. அமெரிக்காவில்  கருப்பு மக்களுக்களின் விடுதலைக்காக போராடிய மால்கம் எக்ஸ் விளக்கியது போல்: “இனவெறி இல்லாமல் முதலாளித்துவம் இருக்க முடியாது”.

சோசலிஸ்ட் கட்சி உறுப்பினர் நீல் டன்னே கிர்க்பியில் வசிக்கிறார், மேலும் பிப்ரவரி 10 இனவெறி எதிர்ப்பு போராட்டத்தை ஏற்பாடு செய்ய உதவியவர். அவர்  இவ்வாறு கூறுகின்றார் 

“கிர்க்பி போன்ற நகரங்கள் வறுமை, ‘நிர்வகிக்கப்பட்ட சரிவு’ மற்றும் தொழில்துறை தகர்க்கப்படுதல் ஆகியவற்றை அனுபவித்துள்ளன. இந்த சிக்கல்கள் தீவிர வலதுசாரிகளின் பெருக்கத்துக்கான துண்டிக்களாகும்.

“வெறித்தனமான , மற்றொரு தீவிர வலதுசாரிக் குழு தன்னை ‘தேசிய வீட்டுவசதி கட்சி’ என்று மறுபெயரிட்டுள்ளது, வாழ்க்கைச் செலவு நெருக்கடியின் போது உழைக்கும் மக்களின் மோசமான நிலைக்கு  அகதிகளைக் குற்றம் சாட்டி வருகிறது. இவர்கள் லிவர்பூல் பகுதியில் துண்டு பிரசுரங்களை விநியோகித்து வருகின்றது.

“வாழ்க்கைச் செலவுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தொழிலாளர் கட்சி – மற்றும் டோரிகள் – தோல்வியுற்றதால்,உரிமைகள் மறுக்கப்படட  உள்ளூர் மக்கள் அரசியல் அனாதைகளாக மாறிவிட்டனர். முதலாளித்துவத்தின் கீழ் ஸ்கிராப்புகளுக்காக மக்கள் போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது, ​​தீவிர வலதுசாரி சிந்தனைகள் வளரலாம்.

அதனால்தான் சமூகத்தின் அடிப்படை, சோசலிச மாற்றத்திற்காக போராடவேண்டிய தேவை இருக்கின்றது. ஜனநாயகத் தொழிலாளர்களின் கட்டுப்பாடு மற்றும் நிர்வாகத்தின் கீழ் வங்கிகள் மற்றும் பெரிய தொழில்களை தேசியமயமாக்குவதற்காக நாங்கள் போராடுகிறோம்,இது  சமூகத்தின் பெரும்பான்மையாக இருக்கும் உழைக்கும் மக்களின்  நலன்களுக்காக ஆரம்ப புள்ளியாக இருக்கும்.