அடக்குமுறை இலங்கை அரசின் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு எதிராக அணி திரளுவோம்.

அடக்குமுறை இலங்கை அரசின் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு எதிராக அணி திரளுவோம்.

இலங்கை அரசு சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகள் நிறைவடைகின்றது.இலங்கையின் சுதந்திரம் அரசுக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்குமான சுதந்திரமே ஒழிய இலங்கையில் இருக்கும் ஒடுக்கப்படும் மக்களுக்கான சுதந்திரம் அல்ல. இலங்கை அரசின் சுதந்திர தினம் என்பது ஒடுக்கப்படும் மக்களின் சுதந்திரத்துக்கான போராட்ட நாள் என்ன தமிழ் சொலிடரிட்டி லண்டனில் இருக்கும் இலங்கை தூதரகத்துக்கு முன்பு ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 4 இல் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பது நீங்கள் அறிந்ததே.

இந்த வருடம் புதிய அரசாங்கம் பதவியேற்றதைத் தொடர்ந்து அனைவரும் இலங்கையராக ஒன்று கூடுவோம் என்ற கோஷம் அதிகரித்து இருக்கின்றது. இருப்பினும் தொடர்ச்சியாக ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படும் தமிழ் மக்களின் உரிமை சார்ந்து எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த வெற்று ஒற்றுமை கோஷத்தை அம்பலப்படுத்த வேண்டும். எமது மக்களின் விடுதலைக்கான ஒரு பலமான சக்தியாக புலம்பெயர் தேசத்தில் நாங்கள் இருக்கின்றோம் என்பதை உணர்த்ததுவதோடு எமது போராட்டத்தையும் பலப்படுத்த வேண்டும். இது தெடர்பான எமது அறிக்கை நாளை வெளியிடப்படும்.

ஒவ்வொரு வருடமும் எமது அரசியல் நிலைப்பாட்டை முன்வைத்து தமிழ் சொலிடரிட்டி இலங்கை தூதரகத்தின் முன் ஆர்பாட்டத்தை ஏற்பாடு செய்து வந்தது. புதிதாக பதவியேற்றிருக்கும் NPP அரசின் முற்போக்கு கபட நாடகத்துக்கு எதிராக புலம் பெயர்ந்த தேசங்களில் இருக்கும் அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்த போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் சொலிடாரிட்டி கோருகிறது.

இந்த போராட்டத்தை முன்னடத்தும் மற்றும் ஒரு அமைப்பான தமிழர் ஒருங்கிணைப்பு குழு உடனான உரையாடலில் இந்த கோரிக்கையை நாங்கள் முன் வைத்திருந்தோம். எமது எதிர்ப்பு புள்ளியில் ஒன்றுபடக்கூடிய அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும் என்பது எமது நோக்கம். தத்தமது அரசியல் நிலைபாட்டை முன்வைக்க அமைப்புக்கள் தனித்து இயங்கியபோதும் இந்த சமயத்தில் விடுதலைக்கான கோரிக்கையில் எமது ஒற்றுமையையும் நாம் காட்ட வேண்டியது அவசியம்.
அதன் அடிப்படையில் இந்த வருடம் லண்டனில் நடைபெற இருக்கும் இலங்கையின் சுதந்திர தினத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒன்றினைந்து கலந்து கொள்வது என தமிழ் சொலிடாரிட்டி முடிவெடுத்து இருக்கின்றது. அனைவரும் இந்த ஒன்றுபட்ட போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். அவரவர்கள் தமது அரசியல நிலைப்பாட்டை பிரதி செய்யும் பதாகைகள் மற்றும் கோசங்களை தனிப்பட வைத்த போதும் போராட்டம் உடைவின்றி ஒருமித்த குரலில் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் நாம் இந்த கோரிக்கையை முன் வைக்கிறோம். இது பற்றிய கேள்விகள் இருப்பவர்கள் – உரையாட விரும்புபவர்கள் எம்மமோடு தொடர்பு கொள்ளுங்கள் .

தமிழ் சொலிடாரிட்டியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பிப்ரவரி 4ம் திகதி காலை 11 மணிக்கு லண்டன் இலங்கை தூதரகத்துக்கு (Sri Lanka High Commission ,13 Hyde Park Gardens, Tyburnia, London W2 2LU) முன்பு நடைபெற இருக்கும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றி

தொடர்புகளுக்கு
ராகவன்
07837539265.
சாரங்கன்
07421261145