வெனிசுவேலா:டிரம்ப் மற்றும் ஏகாதிபத்தியத் தாக்குதல்களின் புதிய யுகம்: பகுதி 1

மதுரோ நியூயார்க்கில் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

வெனிசுவேலா:டிரம்ப் மற்றும் ஏகாதிபத்தியத் தாக்குதல்களின் புதிய யுகம்: பகுதி 1

Tony Saunois, CWI Secretary  

நன்றி socialistworld.net

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவத் தாக்குதலின் மூலம் வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலாஸ் மதுரோவும், அவரது மனைவி செலியா ஃப்ளோரஸும் கடத்தப்பட்ட நிகழ்வுடன்  2026ஆம் ஆண்டு தொடங்கியுள்ளது. டிரம்ப் ஆட்சியால் மேற்கொள்ளப்பட்ட இந்த வெளிப்படையான காலனித்துவத் தாக்குதல்(naked colonial attack), வெனிசுவேலாவிலும், முழு லத்தீன் அமெரிக்காவிலும், உலகளாவிய புவியியல்-அரசியல் உறவுகளிலும் ஆழமான விளைவுகளை ஏற்படுத்தும். இதன் அதிர்வுகள் உலகம் முழுவதும் உணரப்படுகின்றன. இந்த நவீன Gun boat இராஜதந்திரம், நாம் நுழைந்திருக்கும் காலத்தின் இயல்பைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.

அமெரிக்கப் படைகளின் வெனிசுவேலா தலையீடு, மருத்துவச் சத்திரசிகிச்சைக்குரிய  சீரான துல்லியத்துடன் மேற்கொள்ளப்பட்டது. 150 போர் விமானங்கள் “அதிர்ச்சியூட்டும் மற்றும் அச்சுறுத்தும் போர்முறை(shock and awe)” பாணியில் குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியன. தலை நகரான கராக்காஸின்(Caracas) மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டு, நகரம் முழுமையாக இருளில் மூழ்கிய பின்னர், ட்ரோன் மற்றும் ஹெலிகாப்டர் ஊடுருவல்கள் நடந்தன. அதன் பின்னர் இது ஐக்கிய அமெரிக்க இராணுவத்தின் (US Army) மிகவும் இரகசியமான, உயர் பயிற்சி பெற்ற சிறப்புக் குழுவன  டெல்டா ஃபோர்ஸ் படையினர் நுழைந்தனர். வெறித்தனமான பழிவாங்கலாக, வெனிசுவேலாவின் முன்னாள் ஜனாதிபதி ஹூகோ சாவேஸின் உடல் அடக்கம் செய்யப்பட்ட சமாதியும்  குண்டுவீச்சுக்குள்ளாக்கப்பட்டது.

ஆனால், டிரம்பும் மேற்கத்திய ஊடகங்களும் கூறுவது போல் இது “அமைதியான நடவடிக்கை” அல்ல. நடவடிக்கையின் போது எதிர்த்து போராடிய மதுரோவின் பாதுகாவலர்களில் பெரும்பாலோர் கொல்லப்பட்டதாக வெனிசுவேலா படைகள் கூறுகின்றன. கூடுதலாக, 32 கியூபா போராளிகளும் உயிரிழந்துள்ளனர். மொத்தத்தில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக வெனிசுவேலா அரசு அறிவிக்கிறது. இப்போது எழும் முக்கியமான கேள்வி: வெனிசுவேலாவில் அடுத்தது என்ன?

மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு, விலங்கிடப்படட நிலையில் நியூயார்க்கில் நடைபெறும் நாடகப் “நிகழ்ச்சி விசாரணைக்காக” இழுத்துச் செல்லப்பட்ட செயல், வெளிப்படையான காலனித்துவத்தின் அப்பட்டமான  எடுத்துக்காட்டு. இதற்கு முன்பாகவே, வெனிசுவேலா எண்ணெய் கடலில் பறிமுதல் செய்யப்பட்டது அத்தோடு கரீபியன் கடலில் 15,000 அமெரிக்கப் படைகளுடன் ஒரு பெரிய இராணுவம்  குவிக்கப்பட்டிருக்கின்றது.

மதுரோ மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் டிரம்பும் அமெரிக்க ஏகாதிபத்தியமும்  வெளிப்படுத்தும் பாசாங்குத்தனம் தாங்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. 2017 தேர்தலில் டிரம்ப் ஆதரித்த மத்திய அமெரிக்க நாடான ஹோண்டூராஸீன்  முன்னாள் வலதுசாரி ஜனாதிபதி  ஜுவான் ஓர்லாண்டோ ஹெர்னாண்டஸ், அதே நேரத்தில், ஒபாமா அவரை “சிறந்த கூட்டாளி” என பாராட்டினார். பின்னர், 400 டன் கொகெய்னை அமெரிக்காவுக்குள் கடத்திய குற்றச்சாட்டில் அமெரிக்காவில் விசாரணை செய்யப்பட்டு, 40 ஆண்டுகளுக்கும் மேலான சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் டிரம்ப், 2025 டிசம்பர் 1ஆம் தேதி மதுரோ கடத்தப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு  அவரை மன்னித்து விடுதலை செய்தார்!.

மதுரோ தனது முதல் நீதிமன்ற விசாரணையின் போது  தன்னை “போர் கைதி” எனக் குறிப்பிட்டார்  பல வகைகளில் அது உண்மையேயே சரியான விளக்கம். அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நகைச்சுவைக்குரிய எல்லையைத் தொடுகின்றன. “Cartel de los Soles” என்ற போதைப் பொருள் கும்பலுக்கு தலைமைவகிப்பதாக  அவர் குற்றம் சாட்டப்படுகிறார். ஆனால் அந்த அமைப்பு உண்மையில் ஒரு அமைப்பாகவே இல்லை. வெனிசுவேலாவில் அது லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை குறிக்கும் ஒரு சொற்பிரயோகம் மட்டுமே. மதுரோ ஊழலில் ஈடுபட்டாரா அல்லது போதைப் பொருள் கும்பல்களுடன் தொடர்புடையவரா என்பதைக் தீர்மானிக்க வேண்டியது வெனிசுவேலா தொழிலாளர் வர்க்கமே — வெனிசுவேலா எண்ணெயை கைப்பற்றத் துடிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் அல்ல.

டிரம்ப் அகந்தையுடன், அமெரிக்கா இப்போது வெனிசுவேலாவை “நடத்தும்” என்றும், அதன் எண்ணெய் “எங்களுடைய எண்ணெய்” என்றும் அறிவித்தார். மேலும், வெனிசுவேலா ஆட்சி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உத்தரவுகளை ஏற்கவில்லை என்றால், தரைவழி தாக்குதல்  உட்பட மேலும் படையெடுப்பதற்கு அமெரிக்கா தயங்காது என்றும் மிரட்டினார்.

இது “ஜனநாயகத்திற்காக” என்ற டிரம்பின் கூற்றை , பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் போன்ற மேற்கத்திய மூலதனவாதத் தலைவர்களும்  ஒலிப்பது  முற்றிலும் கேலிக்குரியது. அமெரிக்கா “அதை சரிசெய்யும் வரை” வெனிசுலாவில் புதிய தேர்தல்கள் என்ற யோசனையை டிரம்பும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ரூபியோவும் வெட்கமின்றி நிராகரித்துள்ளனர். முன்னர் பாராட்டப்பட்ட வெனிசுலா வலதுசாரி எதிர்க்கட்சித் தலைவர்களான மரியா மச்சாடோ மற்றும் எட்முண்டோ கோன்சாலஸ் (வாஷிங்டன் மற்றும் பிறரால் 2024 வெனிசுலா ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதாகக் கூறப்படும்வர்கள்) போன்றவர்கள் மக்கள்  “ஆதரவு இல்லாததால்” டிரம்ப்பால்  மரியாதையின்றி கைவிடப்பட்டுள்ளனர்.

அமெரிக்க நிறுவனங்களுக்காக வெனிசுவேலா எண்ணெய் மீது உரிமை கோருவதில் டிரம்ப் எந்த வெட்கமும் காட்டவில்லை. 50 மில்லியன் பீப்பாய் எண்ணெயை பறிமுதல் செய்து திறந்த சந்தையில் விற்பதாகவும், அந்த வருவாய்யில்  அமெரிக்கப் பொருட்கள் மட்டுமே வாங்க  பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறுகிறார். இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. சவுதி அரேபியா போன்ற கொடுங்கோல் ஆட்சிகள் குறித்து முழுமையான மௌனம் காக்கும் மேற்கத்திய மூலதனவாத நாடுகள், மதுரோவை “அடக்குமுறையாளர்” எனக் கண்டிப்பது இரட்டை முகத்தனத்தின் உச்சம்.

நவீன “மோன்ரோ கொள்கை(Monroe Doctrine)”

இந்தத் தலையீடு, டிரம்ப் பெருமையாகக் கூறியபடி, “மோன்ரோ கொள்கை”யின் நவீன வடிவத்திற்கு மீண்டும் திரும்புவதை குறிக்கிறது. 1823ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் மோன்ரோ அறிவித்த இந்தக் கொள்கை, லத்தீன் அமெரிக்கா முழுவதும் தனது நலன்களை பாதுகாக்கவும் முன்னேற்றவும் தேவையான எந்த வகையிலும் தலையிட அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு உரிமை இருப்பதாக அறிவித்தது. அக்காலத்தில், மேற்குக் கோளத்தில் ஐரோப்பிய தலையீட்டைத் தடுப்பதற்காக அமெரிக்க செல்வாக்கை விரிவுபடுத்துவதே அதன் நோக்கமாக இருந்தது.

இன்றோ, இந்த “மோன்ரோ கொள்கை” ஒரு வெளிப்படையான காலனித்துவச் செயல். அது  சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் எதிரான எச்சரிக்கையாகவே உள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியம் அந்த  கண்டம் முழுவதும் மற்றும் உலகளாவிய அளவிலும் பலவீனமடைந்திருந்தாலும், லத்தீன் அமெரிக்காவை இன்னும் தனது “பின்வாசல்” என அமெரிக்கா கருதுவதை இது வெளிப்படுத்துகிறது.

மதுரோ கடத்தப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகவே, அவர் ஒரு சீன வர்த்தகக் குழுவை சந்தித்துக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. வெனிசுவேலா எண்ணெயின் மிகப்பெரிய கொள்வனவாளர் சீனாதான். 2025 டிசம்பரில் வெளியிடப்பட்ட அமெரிக்க தேசிய பாதுகாப்பு மூலோபாய ஆவணம், அமெரிக்க கண்டத்தில் “வர்த்தக ரீதியாக முக்கியமான வளங்களை” எதிரணி சக்திகள் கட்டுப்படுத்துவதைத் தடுக்க அமெரிக்காவுக்கு ஒருதலைப்பட்ச உரிமை இருப்பதாக அறிவிக்கிறது. மேலும், அந்தப் பிராந்தியத்தில் உட்கட்டமைப்புகளை உருவாக்கும் வெளிநாட்டு நிறுவனங்களை “வெளியேற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்” எனவும் அது கூறுகிறது.  இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து, சீனாவின் லத்தீன் அமெரிக்காவுடனான வர்த்தகம் 40 மடங்கு அதிகரித்து, 2024ல் 518 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இன்றைய லத்தீன் அமெரிக்காவில் BYD கார்கள் ஓடுகின்றன; Xiaomi ஸ்மார்ட்போன்கள் பயன்பாட்டில் உள்ளன. Uberக்கு பதிலாக Didi மூலம் டாக்ஸியும் உணவும் ஆர்டர் செய்யப்படுகிறது.

புதிய உலக புவியியல்-அரசியல் ஒழுங்கு

அமெரிக்க ஏகாதிபத்திய சக்தியின் இந்த வெளிப்பாடு, வெனிசுவேலாவையும் லத்தீன் அமெரிக்காவையும் தாண்டி, புதிய உலக புவியியல்-அரசியல் ஒழுங்கில் தீர்மானமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. ரஷ்யக் கொடியுடன் சென்ற எண்ணெய் டேங்கர் ஒன்றை அட்லாண்டிக் பெருங்கடலில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் படைகள் பறிமுதல் செய்த சம்பவம் இதன் பிரதிபலிப்பாகும். இங்கிலாந்தில், டிரம்புடனான தனது கூட்டுச் சதிக்காகவும், மதுரோவின் கடத்தலைக் கண்டிக்க மறுப்பதற்காகவும் ஸ்டார்மர் ஒரு விலையைச் செலுத்தி வருகிறார், இதன் விளைவாக ஆளும் தொழிற்கட்சியில் மேலும் பிளவுகள் உருவாகின்றன.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவானதாகக் கூறப்படும், ஐக்கிய நாடுகள் போன்ற மூலதனவாத அமைப்புகள் மேற்பார்வை செய்த “சட்டத்தின் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கு” முற்றிலும் சிதைந்துவிட்டது. இப்போது,  குறைந்தபட்ச அதிகாரபூர்வமாகக்கூட விதிகள் என்றே எதுவும் இல்லை . உண்மையில், கடந்த காலத்திலும் அந்த “விதிகள்” பெரும்பாலும் அர்த்தமற்றவையே. எல்லா ஏகாதிபத்திய  சக்திகளாலும் அவை மீறப்பட்டுள்ளன. வியட்நாம், ஈராக், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் நடந்த தலையீடுகள் இதற்கு சாட்சி.

அமெரிக்க ஏகாதிபத்தியம் லத்தீன் மற்றும் மத்திய அமெரிக்காவின் பெரும்பாலான நாடுகளில் படையெடுப்புகளையும், இராணுவக் குடியரசு புரட்சிகளையும் நிகழ்த்தியுள்ளது. 1970களின் நடுப்பகுதிக்குள், அமெரிக்க ஆதரவுடன் நடைபெற்ற இராணுவக் குடியரசு புரட்சிகளால், லத்தீன் அமெரிக்கா முழுவதும் ஒரு மாபெரும் சிறை முகாமாக மாறியது. 1994ல், பில் கிளிண்டன் ஹைட்டியில் இராணுவ ஆட்சியை அகற்ற 20,000க்கும் மேற்பட்ட படைகளை அனுப்பினார்  அது ஒரு பேரழிவாக முடிந்தது. 1989ல், ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ் 27,000 படைகளை பனாமாவுக்கு அனுப்பினார். 1983ல், கிரெனடாவை ஆக்கிரமிக்கப்போவதாக, அதன் அரசுத் தலைவராக  பிரிட்டிஷ் மகாராணி இருந்த போதிலும், மார்கரெட் தாட்சருக்கு கூட ரீகன் தெரிவிக்கவில்லை.

ஆனால் இன்றைய புதிய புவியியல்-அரசியல் சூழலில்  அமெரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றின் பலவீனம் மற்றும் சீனா, இந்தியா போன்ற சக்திகளின் எழுச்சி இணைந்த நிலையில்  இந்த புதிய “மோன்ரோ கொள்கை” மிகப் பெரிய விளைவுகளை உருவாக்கும். அமெரிக்கா தனது “பின்வாசலில்” தலையிட உரிமை கொண்டதாகக் கூறினால், சீனா, ரஷ்யா, இந்தியா ஆகியவை அதையே செய்யக்கூடாதா? இதன் மூலம் உலகளாவிய ரீதியில் மேலும் இராணுவ மோதல்கள் மற்றும் தீவிர துருவப்படுத்தல் உருவாகும் நிலைமை உருவாகியுள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெருக்கடி

வெனிசுவேலா மீது மேற்கொள்ளப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கை, டிரம்பின் தனிப்பட்ட சாகசம் மட்டுமல்ல. இது அமெரிக்க ஏகாதிபத்தியம் எதிர்கொள்ளும் ஆழமான கட்டமைப்பு நெருக்கடியின் வெளிப்பாடாகும். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவான அமெரிக்க ஆதிக்க உலக ஒழுங்கு இன்று கடுமையாகக் குலைந்துவிட்டது.

அமெரிக்க பொருளாதாரம், பெரும் கடன், உற்பத்தித் துறையின் சரிவு, நிதி மூலதனத்தின் ஆதிக்கம் ஆகியவற்றால் நீண்ட காலமாகவே பாதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில், அரசியல் துருவப்படுத்தல், ஜனநாயக அமைப்புகளின் நம்பகத்தன்மை சரிவு, வலதுசாரி தேசியவாதத்தின் எழுச்சி ஆகியவை ஆட்சியாளர்களை மேலும் ஆக்கிரமிப்புத் திசையில் தள்ளுகின்றன. இந்தப் பின்னணியில்தான் வெளிநாட்டு இராணுவ சாகசங்கள் “வலிமை”யின் அடையாளமாக முன்வைக்கப்படுகின்றன.

டிரம்ப், இந்த தலையீட்டை உள்நாட்டு அரசியலுக்கான கருவியாகவும் பயன்படுத்துகிறார். “அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக்குவோம்” என்ற முழக்கம், இப்போது வெளிப்படையாக எண்ணெய் வளங்களின் கொள்ளை மற்றும் பிற நாடுகளின் அரசியல் சுயாதீனத்தை நசுக்கும் நடவடிக்கைகளாக மாறியுள்ளது. வெனிசுவேலா எண்ணெய் மீதான அவரது வெளிப்படையான உரிமைக் கோரிக்கை, இதன் மிகத் தெளிவான எடுத்துக்காட்டாகும்.

மதுரோவின் ஆட்சி

எட்டு மில்லியன் வெனிசுலா மக்கள் நாட்டை விட்டு வெளியேறியதில் பிரதிபலிக்கும் ஆழ்ந்த பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி இருந்தபோதிலும், மதுரோ ஆட்சி இன்னும் ஒரு ஆதரவைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. குறிப்பாக 1999 தேர்தலுக்குப் பிறகு ஹ்யூகோ சாவேஸின் தலைமையில், வெனிசுலாவில் புரட்சிகர செயல்முறையின் மரபிலிருந்து வருகிறது,  குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் ஆதரிக்கப்பட்ட 2002 ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் தோல்விக்குப் பின்னர். சாவேஸால் செயல்படுத்தப்பட்ட சீர்திருத்தங்கள் சுகாதாரம், கல்வி மற்றும் பிற துறைகளில் பரவலாக இருந்தன, குறைந்த வருமானம் உள்ள மக்களுக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் குறிப்பிடத்தக்க நன்மைகளை அளித்தன. வறுமை குறைக்கப்பட்டது, மேலும் எழுத்தறிவு விகிதங்கள் வியத்தகு முறையில் அதிகரித்தன, குறிப்பாக 2003 மற்றும் 2007 க்கு இடையில். எண்ணெய் விலை உயர்வைத் தொடர்ந்து எண்ணெய் வருவாயில் ஏற்படும் அதிகரிப்பை சாவேஸ் நம்பியிருந்தார். இருப்பினும், பொருளாதாரத்தில் அதிகரித்த அரசு தலையீடு இருந்தபோதிலும், முதலாளித்துவம் தூக்கியெறியப்படவில்லை.2013 இல் சாவேஸ் இறந்ததிலிருந்து, முதலாளித்துவ நலன்களுக்கு எதிரான   தீவிர சீர்திருத்தங்களிலிருந்து மதுரோ பின்வாங்கியுள்ளார்.

 

அதே நேரத்தில், “போலி-பூர்ஜுவாசி” (Boli-bourgeoisie) என அழைக்கப்படும்  ஓரு புதிய உயர் குடி ஒன்று போலிவேரிய இயக்கத்தின் உள்ளிருந்தே உருவானது. இந்தப் பரிணாமம் சாவேஸ் காலத்தில் தொடங்கியிருந்தாலும், மதுரோ ஆட்சிக் காலத்தில்தான் அது தனது நிலையை மேலும் வலுப்படுத்தியது. இந்தக் குழு ஊழலால் நிரம்பியதாகவும், வெனிசுவேலா மூலதனவாதத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளது.

மூலதனவாதம் முற்றாக ஒழிக்கப்படாமல், அதற்கு பதிலாக ஜனநாயகமான சோஷலிசத் திட்டமிட்ட பொருளாதாரம் நிறுவப்படாத நிலையில், இந்த நிலை உருவானது. சாவேஸ் அமல்படுத்திய சீர்திருத்தங்கள், மூலதனவாதம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் நலன்களைத் தாக்கின. ஆனால் அவை கீழிருந்து மேலெழும் மக்களாட்சி முறையாக இல்லாமல்  மேலிருந்து கீழே இறங்கும் நிர்வாக இயந்திரத்தின் ஊடாக, அதிகார முறையில் அமல்படுத்தப்பட்டன.

மதுரோ ஆட்சிக்காலத்தில், சாவேஸ் காலத்தின் சோஷலிசப் பேச்சுவார்த்தைகள் பெருமளவில் புறக்கணிக்கப்பட்டன. அவர் தலைமையில், அரசு மேலும் மேலும் ஊழல்மிக்கதும் அடக்குமுறையுடனும் கூடிய ஒரு ஆட்சியாக மாறியது. அமெரிக்க ஏகாதிபத்தியம்  விதித்த பொருளாதாரத் தடைகள், நிலைமையை மேலும் மோசமாக்கின. பொருளாதாரம் முழுமையாகச் சரிந்து, கட்டுப்பாடற்ற பணவீக்கம் (hyperinflation) உருவானது. கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்குள்  தள்ளப்பட்டனர்.

இவை அனைத்திற்கிடையிலும், அந்த ஆட்சி ஒரு ஆதரவுத் தளத்தைத் தொடர்ந்து வைத்திருந்தது. இதற்குக் காரணம், புரட்சிகர காலத்தின் நினைவுச் சுவடும், அக்காலத்தில் கொண்டு வரப்பட்ட சீர்திருத்தங்களும், அதேபோல் வலதுசாரி எதிர்க்கட்சி அதிகாரத்திற்கு வந்தால் அது மேற்கொள்ளக்கூடிய பழிவாங்கல்கள் உள்ளிட்ட தாக்குதல்களுக்கான அச்சமும் ஆகும்.

இதுவே, பல நேரங்களில் தயக்கத்துடனும், மனமின்றிய ஆதரவுடனும் இருந்தாலும், மதுரோவுக்கான ஆதரவாக வெளிப்படுகிறது. “பொய்ச் செய்திகள்” நிரம்பிய மேற்கத்திய ஊடகங்கள், அமெரிக்கத் தலையீட்டுக்கு எதிராகவும், மதுரோவை மீண்டும் கொண்டு வர வேண்டும் எனக் கோரியும், வெனிசுவேலா முழுவதும் நடைபெற்ற பரந்தளவான பெரும் போராட்டங்களை முற்றிலும் புறக்கணித்துள்ளன.

தொடரும்….