இந்த வருடம் சொலிடாரிட்டி நாள் 16 ம் திகதி சனிக்கிழமை INDIAN YMCA இல் நடைபெற்றது. இந்நிகழ்வு 12 மணி அளவில் ஆரம்பித்தது. இதில் பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் அமைப்புக்கள், இளைஞர்கள், செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கங்கள், உறுப்பினர்கள், மற்றும் ஆதரவாளர்கள் கலந்துக் கொண்டனர்.
இதில் முதல் நிகழ்வாக அரசியல் கலந்துரையாடல்கள், விவாதங்கள் இடம்பெற்றது. இந்நிகழ்வை பா. நடேசன் (National Coordinating member of Tamil Solidarity) தொகுத்து வழங்கினர். இதில் சேனன் (International Coordinator) தமிழ் சொலிடாரிட்டி அமைப்பின் அரசியல் நிலைபாட்டினையும் எமது அரசியல் போராட்டத்தினையும் சில முக்கய புள்ளிகளை முன்வைத்தார். மற்றும் எமது போராட்டத்தை எவ்வாறு பிரித்தானிய தொழிற் சங்கங்களோடு இணைந்து வென்றெடுப்பது என்பதனையும் தெளிவுபடுத்தினார்.
அதனை தொடர்ந்து சத்யா ராஜன் (National Co-ordinating member of Tamil Solidarity) இந்தியாவில் நடைபெறும் போராட்டங்களும் அவர்களின் அரசியல் போதாமையும் தமிழ் சொலிடரிட்டியின் அரசியல் நிலைப்பாட்டினையும் மக்களின் போராட்ட சக்திகளையும் தெளிவுபடுத்தினார். தற்போது நடைபெற்ற ஸ்டேர்லைட் போராட்டத்தில் மக்கள் வீதியில் வந்து போராட தயாராக இருந்த போதும் அது மோடிக்கும் எதிராக திரும்பும் நிலை இருந்ததால் அப்போராட்டம் கொடூரமாக முடக்கப்பட்டது. இந்தப் போராட்டம் ஒரு பெரிய மாற்றத்தைகொண்டு வந்திருக்க முடியும். இருப்பினும் இந்தப் போராட்டத்தை அரசியல் ரீதியாக கட்டி எழுப்ப தெளிவான அரசியில் அமைப்பின் பங்களிப்பு தேவையுள்ளது. தமிழ் சொலிடரிட்டி அங்கிருக்கும் போராட்ட சக்திகளோடு இணைந்து செயற்பட விரும்புகிறது. இவ்வாறான போராட்ட சக்திகளோடு எமது போராட்த்தை கட்டியெழுப்ப முடியுமே தவிர மோடியோடு இணைந்து அல்ல என்பதினை தெளிவுப்படுத்தினார் சத்யா.
இதனைத் தொடர்ந்து மணிவண்ணன் (TGTE Human Rights Minister), சதா (Member of TCC) ஆகியோரும் பேசினார். இவர்கள் இருவரும் அமைப்புக்களில் இருந்தாலும் அவர்கள் அமைப்பு சார்பாக கதைக்கவில்லை. மற்றும் பொது மக்கள் கேள்விகளும் அவர்களின் கருத்துக்களும் உரையாடப்பட்டது.
தொடர்ந்து நடந்த நிகழ்வில் தொழிற் சங்கங்களின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர். இது ஒரு முக்கியமான பகுதி. இந்நிகழ்வை ரா லாவண்யா (National Coordinating member of Tamil Solidarity and Refugee Rights) தொகுத்து வழங்கினர். தொழிற் சங்க தலைமை உறுப்பினர்கள் Hugo Pierre (UNISON NEC) இந்நிகழ்வில் கலந்து கொடிருந்தார். யுனிசன் ஒரு பொதுத்துறை தொழிற்சங்கம். இதில் 1.3 மில்லியன் உறுப்பினர்கள் உள்ளனர். மற்றும் Austin Harney (PCS International Committee and in the National Executive Committee) பி .சி எஸ் தொழிற்சங்கம் சார்பாக கதைத்தார். மற்றும் Chris Baugh (Assistant General Secretary of PCS) கலந்து கொள்ள முடியாத காரணத்தால் ஒரு சொலிடாரிட்டி செய்தி அனுப்பியிருந்தார். அச்செய்தி வாசிக்கப் பட்டது. மற்றும் ஊடகவியலாளரான Phil Miller (Journalist and researcher) உரையாடினார். இவர்களுடன் தமிழ் சொலிடாரிட்டிஅமைப்பின் உறுப்பினர்களான Matha Nathan (National Coordinating member of Tamil Solidarity and Refugee Rights) அகதிகளின் அமைப்பு சார்பாக பேசுகையில் இங்கு இருக்கும் அகதிகளின் நிலைகளையும் இந்நாட்டின் அரசியல் தவறுகளையும் அவர்கள் எவ்வாறு அகதிகளை நடத்துகிறார்கள் என்பதுனையும் சுட்டிக்காட்டியிருந்தார். தொடர்ந்து Claire Laker-Mansfield (Socialist, and an activist in Rape if No Joke campaign) பேசினார்.
இதைத் தொடர்ந்து Manny Thain (Founding member of Tamil Solidarity and Campaign Organiser) இந்நிகழ்வுக்கு வந்தவர்களுக்கு நன்றி கூறியும் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பின் தற்போது நடைபெற்ற போராட்டங்களையும் எமது அமைப்பின் அரசியல் நிலைப்பாட்டினையும் ஏன் எமது உறுப்பினர்களுக்கு அரசியல் அறிவின் தேவைகள் இருக்கின்றது என்பதினையும் சுருக்கமாக வழங்கினர்.
லாவண்யா
[robo-gallery id=”3467″]