இலங்கை தீவில் சிறுபான்மை இன மக்களை ஒடுக்கும் வகையில் பெளத்த இனவாதம் எழுந்து நிற்கிறது. இதை கண்டித்து லண்டன் இலங்கை தூதரகத்திற்கு முன்பாக 25-09-2019 அன்று புதன்கிழமை தமிழ் சொலிடாரிட்டி அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
100க்கும் அதிகமான இளைஞர்கள் கலந்துகொண்டு இனவாதத்திற்க்கு எதிராக அவர்களது எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்.
#பெளத்த பெரினவாத அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்து.
# மக்களுக்கான காணி உரிமை, பேச்சுரிமை, போராடும் உரிமையை வழங்கு.
# பெளத்த இனவாத வன்முறையாளர்களை உடனடியாக கைது செய்.
# பாதிக்கபட்டவர்களுக்கான நீதியை வழங்கு.
# மத உரிமைகள் மற்றும் காணி அபகரிப்பை நிறுத்து.
என்ற கோரிக்கைகள் முன்வைத்து இந்த போராட்டம் நடை பெற்றது.
இந்த வகையில் கடந்த தினங்களில் புத்த பிக்குகள் முல்லைத்தீவு பகுதியில் பிறப்பிக்கபட்ட வழக்கு ஆணையை மீறிய சம்பவம்ஒன்று இடம்பெற்றிருந்தது.
அது தொடர்பாக:
பிக்குவின் இறுதி கிரியைகளை செய்வதற்காக வந்த பிக்குமார்கள் மரணமான பெளத்த விகாரதிபதியின் உடலை தகனம் செய்வதற்காக கோயில் வளாகத்திற்குள் கொண்டு வருவதற்க்கு முயற்சித்தனர்.
அதையடுத்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நீதி மன்றத்தினை நாடினார்கள். அந்த வழக்கில் கோயில் வளாகத்தில் எரியூட்ட தடை உத்தரவு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டது. அதற்கு அண்மையில் விகாரதிபதியின் உடலை விகாரையின் முன்னால் உள்ள இராணுவத்த்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் அவரது உடலை தகனம் செய்ய அனுமதியும் வழங்கப்பட்டது. அதையடுத்து பொதுபல சேனா ஞானசார தேரர் தலைமையில் திட்டமிட்டு நீதிமன்ற உத்தரவையும் மீறி ஆலயத்தின் தீர்த்தக்குளத்தின் அருகாமையில் தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் தேரரின் உடல் தீயில் சங்கமிக்கபட்டது.
இதேவேளை இது தொடர்பாக பெளத்த மதத்தை பின்பற்றும் மக்களிடம் கேள்வி கேட்ட போது? ஒரு பௌத்த பிக்கு மரணித்த போது அவரது உடலை அவர் வாழ்ந்த விகாரையின் பூமியில் தகனம் செய்ய வேண்டும் என எந்த விதியும் இல்லை. அதிகமாக ஒரு விளையாட்டரங்கு அல்லது பொது இடம் அல்லது தகனம் செய்யும் இடமொன்றில் நடைபெறுவதே பொதுவானதாக இருந்துள்ளது என குறிப்பிட்டனர்.
அதேவேளை அப்பிரதேச தமிழ்பேசும் மக்கள் திட்டமிட்ட காணி அபகரிப்பிற்கும் பெளத்த பேரினவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அங்கு சென்றிருந்தார்கள். அம்மக்களுக்கு அருகில் வந்த பிக்குமார் ”பெளத்தத்திற்குதான் இலங்கையில் முன்னுரிமை” இருக்கிறதென்பது தெரியாதா?
இது பெளத்த நாடு தெரியாதா? என்று இனவாத வார்த்தைகளை பயன்படுத்தினர்.
அதேவேளை அங்கு எதிர்ப்பினை காட்டுவதற்காக வந்த பிரதேச மக்கள் மீது இனவாத தாக்குதல் செய்தார்கள். பொலிசார் அதிகமாக பிக்குமார்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து வேடிக்கை பார்த்தனர் என அங்கிருக்கும் மக்கள் தெரிவித்தனர். இவ்வாறான இனவாத செயல்கள் கடந்த காலங்களில் முஸ்லிம் மக்கள் மீதும் ஏவப்பட்டன.இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தில்(Constitution) மாற்றமுடியாத சில 10 அம்சங்களுள் புத்தசாசனம் இருக்கின்றது என்பதற்காக இலங்கை வாழ் சிறுபான்மை இன மக்களை
தாக்குவதற்காகவே இலங்கையில் இனவாத அரசுக்கள் இவ்வாறான இனவாத மதகுழுவினர்களை பாவித்து தமது அரசியல் லாபத்தை அடைகின்றார்கள். இவ்வாறான செயல்கள் காலங்காலமாக தொடர்கிறது. இன்றுவரை பாதிக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிகள் அரசியலைமைப்பு சட்டத்தை மாற்றியமைப்பதற்கு முன்வரவில்லை.
இவ்வாறுள்ள போது பல்லின, பல மத சமூகங்களை கொண்ட இலங்கையில் அமைதி எவ்வாறு சாத்தியம்? அல்லது தமிழ்பேசும் மக்கள் தமக்கான அடிப்படை மத கலாச்சார உரிமைகளின் பிரச்சனைகளை எவ்வாறு கேட்பது? நீதிமன்றங்களை விட உச்ச அதிகாரம் பிக்குகளின் கைகளில் இருப்பதாயின், நீதி கேட்க இனி விகாரைகளைத்தான் நாடவேண்டுமா? என பாதிக்கபட்ட மக்கள் கொந்தளித்தனர்.
மறுநாள் முல்லைதீவு மக்கள் தன்னெழுச்சியாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆத்திரங்கொண்ட மக்கள் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரது உருவம் பொறிக்கப்பட்டிருந்த பதாதை மீது செருப்புக்களைக் கொண்டு தாக்கி உருவப்படத்தையும் எதிர்த்தனர்.
வடகிழக்கு நீதித்துறையின் சட்டத்தரணிகளும் வேலைநிறுத்தம் மற்றும் எதிர்ப்புகளை வெளிக்காட்டினார்கள். இவ்வகையான மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து நடாத்தும் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பினர் உரிமைகளுக்காக போராடும் மக்களுக்காவும் மற்றும் அடக்குமுறை உருவாக்கும் சக்திகளை எதிர்த்தும் தொடர்ந்து போராடும் என்று அந்த போரட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் குறிப்பிட்டனர்.
நன்றி
மதன்