பிரித்தானியாவில் அரச பொருளாதார உதவிகளை பெறுவதற்கான வழிமுறைகள்

1

தற்போது ஏற்பட்டிருக்கும் COVID-19 சூழ்நிலையால் பிரித்தானியாவில் அவசரகால நிலை பிரகடனபடுத்தப்பட்டு இருப்பது யாவரும் அறிந்ததே.  வேலை தளங்கள் மூடப்பட்டுள்ளன. சிலர் வீட்டில் இருந்து வேலை செய்ய பணிக்கபட்டுள்ளனர். சுயதொழில் செய்வோர் , பகுதி நேரமாக வேலை செய்வோர் , ஒப்பந்தம் இல்லமால் வேலை செய்தோர் , பதிவுகள் இன்றி கைகளில் சம்பளம் வாங்கி வேலை செய்தோர் , வேலை செய்ய அனுமதி இல்லாதவர்கள் , இந்த நாட்டில் தங்கி வாழ அனுமதி மறுக்கபட்டவர்கள் என பலரும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளனர். வைரஸ் தாக்கத்தில் இருந்து  எப்பிடி தப்பிப்பது என்ற பயம் ஒருபுறமும்; தமது வாழ்க்கையினை எவ்வாறு கொண்டு நகர்த்துவது என்ற பயம் மறுபுறமும் ஆட்கொண்டுள்ளது. 

உலகமே இவ்வாறான நெருக்கடி நிலையை எதிர்கொண்டிருக்கும் நிலையில், பிரித்தானிய அரசு நெருக்கடி நிலையினை எதிர்கொள்ள சில வாழ்வாதர திட்டங்களை அறிவித்துள்ளது.  இந்த நடவடிக்கைகள் மக்களின் அனைத்து தேவைகளையும் நிவர்த்தி செய்ய போதாது. மேலதிக கோரிக்கைகளை முன் வைத்து போராட்ட நடவடிக்கைகளை பலப்படுத்த நாம் முன் வர வேண்டும். இருப்பினும் அரசு அறிவித்துள்ள சில விசயங்கள் கூட பலரிடம் போய் சேரவில்லை என்பதால் கீழ்வரும் தகவல்களை தொகுத்துள்ளோம். தேவையானவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். வேறு தகவல்கள் மற்றும் என்ன நடவடிக்கைகள் செய்யலாம் என்பதறிய தமிழ் சொலிடடாரிடி அமைப்புடன் தொடர்பு கொள்ளுங்கள்.

2

தற்போது உள்ள சூழ்நிலையில் எல்லோரும் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விடயம் தற்போது நீங்கள் பாவனைக்குட்படுத்தும் எந்த அடிப்படைச் சேவைகளும் நீங்கள் பணம் செலுத்தவில்லை என்ற காரணங்களுக்காக நிறுத்தப்பட முடியாது. இன்றைய பதட்டமான சூழலை பயன்படுத்தி நிறைய ஏமாற்றி பணம் பறிக்கும் வேலைகளும் இடம் பெற்ற வண்ணம் இருப்பதால்அவதானமாக இருக்கும் படி அரசு பணித்துள்ளது. 

தொழிலாளர்கள் 

நீங்கள் 65 வயதிற்குட்பட்ட, குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வேலை செய்தவராகவும்; தற்போதிருக்கும்  சூழ்நிலையால் உங்கள் உடல்நிலையை கருத்தில் கொண்டு வேலைக்கு செல்ல முடியாதவராகவும் இருந்தால் Employment Support Allowance ற்கு விண்ணப்பிக்கலம்.

மேலதிக விபரங்களுக்கு

https://www.gov.uk/employment-support-allowance/eligibility 

தற்போதைய சூழ்நிலையால் ஏற்பட்ட சுகயீனம் காரணமா உங்களால் வேலைக்கு செல்ல முடியாவிட்டால் நீங்கள் Statutory Sick Pay ற்கு விண்ணப்பிக்கலம். மேலதிக தகவல்கள்

https://www.gov.uk/government/publications/guidance-to-employers-and-businesses-about-covid-19/covid-19-guidance-for-employees#sick-pay

உங்கள் வேலைதளம் மூடப்பட்டு இருந்தால் அல்லது தற்போது வேலை என்று உங்களை நிறுத்தி வைத்திருந்தால் உங்கள் மாத சம்பளத்தில் 80சதவீதத்தை அரசாங்கம் உங்களுக்கு வழக்கும். அதனை Payroll ஊடாக உங்கள் வேலைத்தளம் உங்களுக்கு வழங்க வேண்டும். சம்பளத்தின் மீதி 20சதவீதத்தை வேலைத்தளம் உங்களுக்கு வழங்காலம் என அரசு பரிந்துரைக்கிறது. 

மேலதிக விபரங்களுக்கு  https://www.gov.uk/government/publications/guidance-to-employers-and-businesses-about-covid-19/covid-19-guidance-for-employees#furloughed-workers  

நீங்கள் ஒப்பந்தம் இன்றி வேலை செய்து வேலை வேலை நீக்கம் / வேலை இல்லாதவராக இருந்தால் Coronavirus Job Retention Scheme இற்கு  நீங்கள் விண்ணப்பிக்கலம்.  

நீங்கள் ஏற்கனவே உதவி தொகை பெறுபவர்களாக இருந்து தற்போது வீட்டு வருமானம் குறைவடைந்து இருந்தால் உங்கள் மாநகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு மேலும் உதவியினை பெறலாம்.

மேலதிக விபரங்களுக்கு 

இங்கிலாந்தில் வாசித்தல் https://www.gov.uk/find-local-council

ஸ்கொட்லாந்தில் வாசித்தல் Scottish Welfare Fund

Welsh இல் Discretionary Assistance Fund 

Northern Ireland இல் வாசித்தல் Finance Support

உங்களால் Gas, Electricity, Water போன்ற அடிப்படை சேவைகளுக்கு பணம் செலுத்த முடியவில்லை என்றால் அல்லது வீட்டு வாடகை செலுத்த முடியவில்லை என்றாலோ அரசிடம் உதவிதொகை பெறலாம்.

மேலதிக விபரங்களுக்கு  https://www.citizensadvice.org.uk/debt-and-money/if-you-cant-pay-your-bills-because-of-coronavirus/

உங்கள் சொந்த வீட்டிக்கான மாதாந்த கட்டு பணத்தை (mortgage) கட்ட இயலாது போனால் மூன்று மாதத்திற்கு அந்த கட்டுபணத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்ன அரசு அறிவித்துள்ளது.

அரசின் முழுமையான அறிக்கையை வாசிக்க https://www.gov.uk/government/publications/support-for-those-affected-by-covid-19/support-for-those-affected-by-covid-19

கேளிக்கை , சில்லறை வியாபார நிலையங்கள் மற்றும் ஹோட்டல் போன்ற தொழில்துறைகளுக்கு விசேட சலுகைகளை அரசு அறிவித்துள்ளது. 

முழுமையாக அரச அறிக்கையை அறிந்துகொள்ள https://www.businesssupport.gov.uk/business-rates-holiday-for-retail-hospitality-and-leisure/

உணவு கிடைக்க பெறாத சூழ்நிலை ஏற்படுமானால் நீங்கள் உங்கள் அருகாமையில் இருக்கும்  உணவு வழங்கும் வங்கியை நாடி செல்லலாம் https://www.trusselltrust.org/get-help/find-a-foodbank/

அவசரகால அல்லது  தற்காலிக உதவி தொகையை விரைவாக  பெற 

https://www.gov.uk/short-term-benefit-advance

உங்களுக்கு மேலதிக  விளக்கமோ விபரமோ தேவைபடின் நீங்கள் பின்வரும்  சேவை நிலையங்களை தொடர்பு கொள்ளலாம் 

Jobcentre Plus

https://www.citizensadvice.org.uk/

அகதிகள் 

மேலும் குடிவரவாளர்கள் மற்றும்  அகதி அந்தஸ்து கோருவோர் தொடர்பான விடயங்களிலும்; COVID -19 தாக்கத்தினை தொடர்ந்து அகதி மற்றும் குடிவரவு தொடர்பில் பிரித்தானிய உள்நாட்டு திணைக்களம் (Home Office) சில முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளது.

அகதி விண்ணப்பம் அல்லது ஏனைய வதிவிட விண்ணப்பம் பரிசீலனையில் இருப்பவர்களுக்கான உள்நாட்டு திணைக்களத்தில் பதிவிடும் (Reporting) தேவைப்பாடு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அகதி விண்ணப்பம் தொடர்பான ஆரம்ப தகவல் திரட்டும் நேர்முகத்தேர்வு (Screening Interview) நீக்கப்பட்டு புதிய நடைமுறை தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது. அகதி விண்ணப்பம் தொடர்பான விரிவான நேர்முகத்தேர்வு (Full Asylum Interview) தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது

அகதிகளுக்கான உதவிகள் (NASS Support) இலகுவாக  மீளப்பெறவதற்கும் மற்றும் அகதி உதவியின் அடிப்படையில் வீடுகளில் இருப்பவர்களை வீடுகளில் இருந்து வெளியேற நிர்பந்திப்பதையும் எதிர்வரும் 3 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அகதி உதவி தொடர்பான மேன்முறையீடுகளுக்கு மேன்முறையீட்டாளர்கள் நேரடியாக செல்லவேண்டியதில்லை என்பதுடன் தொலைபேசியினூடாக மேன்முறையீட்டு விசாரணை இடம்பெறும்.

அனைத்து சட்ட மேன்முறையீடுகள் (Appeals) மற்றும் சட்ட மீள்பரிசீலனை (Judicial Review) போன்றவற்றிற்கான நேரடி மேன்முறையீட்டு விசாரணை நிறுத்தப்பட்டுள்ளது. ஏப்பிரல் 30க்கு பின்னர் தொலைபேசியினூடாக மேன்முறையீட்டு மதிப்பீட்டு விசாரணையினை (Case Management Review Hearing) நடத்தலாம் என்று தற்போதைக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலதிக ஆதாரங்களின் கையளிப்பு (Further Submission) அல்லது புதிய விண்ணப்பம் (Fresh Application) என்பன தற்போது Further Submissions Unit, The Capital Building, Old Hall Street,  Liverpool, L3 9PP என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அன்றி CSUCE@homeoffice.gov.uk என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பிவைக்கலாம்.

அரச உதவியுடனான தாமாக விரும்பி சொந்த நாட்டுக்கு திருப்பி செல்ல விருப்புபவர்களை அனுப்பிவைப்பது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

குடிவரவு தடுப்பு முகாம்களில் (Immigration Detention Centres) தடுத்து வைக்கப்பட்டிருந்த 350 க்கு அதிகமானோர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பதுடன் ஏனையோரின் தடுப்புக்களும் மீள்பரிசீலணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

நாடற்றோரின் விண்ணப்பங்களின் பரிசீலனைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

மீள்வதிவுரிமை பயணங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

சனவரி 24 முதல் 31 மே வரையான காலப்பகுதியில் காலாவதியாகும் நுழைவு அனுமதியினை (Leave) கொண்டிருப்போர் பயணக் கட்டுப்பாடு காரணமாக அல்லது COVID-19 தாக்கத்தினால் தாமாக ஒதுங்கியிருக்கவேண்டிய சூழ்நிலையில் இருப்பின் உடனடியாக CIH@homeoffice.gov.uk என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 0800 678 1767 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ தொடர்புகொண்டு உங்கள் முழுப்பெயர், பிறந்த திகதி, சொந்த நாடு, உங்களிடம் உள்ள நுழைவு அனுமதி தொடர்பான விபரம் என்பவற்றுடன் நீங்கள் திரும்பி செல்லமுடியாமைக்கான காரணத்தினையும் உள்நாட்டு அலுவலகத்திற்கு தெரியப்படுத்தவும். அவர்கள் உங்கள் நுழைவு அனுமதி காலாவதியாகும் திகதியினை உங்களுக்கு தெரியப்படுத்துவார்கள்.

https://www.gov.uk/guidance/coronavirus-covid-19-advice-for-uk-visa-applicants-and-temporary-uk-residents

ஏனைய நீண்ட கால வதிவிட உரிமையினை புதுப்பிப்பதற்காக விண்ணப்பிப்போரும் (Extension Applications for Leave to Remain) சனவரி 24 முதல் 31 மே 2020 வரையான காலப்பகுதியில் அவர்களது வதிவிட உரிமை காலாவதியாகும் பட்சத்தில் 31 மே 2020 வரை விண்ணப்பிக்க முடியும் என்பதுடன் தேவையான அனைத்து கட்டணங்களையும் செலுத்தி வழமையான நடைமுறையினை பின்பற்றுதல் வேண்டும்.

சிறு தொழில் செய்வோர் 

நீங்கள் சுயதொழில் செய்பவராக இருந்தால், – உங்கள் கடைசி மூன்று வருட இலாபத்தின் சராசரி குறைந்தது அம்பதினாயிரம் பவுண்சுகளாக இருந்தால் அதில் எண்பது சதவீததை வரும் மூன்று மாதங்களுக்கு  வருமானமாக பெற வாய்ப்புண்டு. மாதம் ஒன்றுக்கு 2500 பவுண்சுகள் வரை பெறலாம். 

மேலதிக விபரங்களுக்கு https://www.gov.uk/guidance/claim-a-grant-through-the-coronavirus-covid-19-self-employment-income-support-scheme

சுயதொழில் செய்வோர் மேற்குறிப்பிட்ட திட்டத்தில் நீங்கள் உள்ளடக்க படவில்லை என்றால் Employment and Support Allowance திட்டத்திற்கோ அல்லது Universel Credit மூலமோ உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலம்.

மேலதிக விபரங்களுக்கு  https://www.gov.uk/government/publications/guidance-to-employers-and-businesses-about-covid-19/covid-19-guidance-for-employees#claiming-benefits

நீங்கள் சொந்தமாக வியாபாரம் செய்பவராக இருந்தால் 10000 முதல்  51000 பவுண்சுகள் வரை அரசிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

மேலதிக விபரங்களுக்கு 

https://www.gov.uk/government/publications/guidance-to-employers-and-businesses-about-covid-19/covid-19-support-for-businesses

இல்லாவிட்டால் இந்த நெருக்கடியான சூழ்நிலையால் உங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டு இருந்தால் கடனுதவி பெற உங்கள் வங்கியினை தொடர்பு கொள்ளலாம். வழமையாக இருக்கும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு விரைவாக கடனை பெறுவதற்கான நடைமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

மேலதிக விபரங்களுக்கு https://www.businesssupport.gov.uk/coronavirus-business-interruption-loan-scheme/

இந்த விதி முறைகள் தொடர்பில் மேலதிக விபரங்கள் தேவைப்படுபவர்கள் எம்முடன்  தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புகளுக்கு

Nadesan@tamilsolidarity.org 

Isaipriya@tamilsolidarity.org 

Ragavan@tamilsolidarity.org