ஆங்கிலத்தில் அகல்யா
தமிழீழ விடுதலை புலிகளை அழிக்க மேற்கொள்ளப்பட்ட போர், 21ஆம் நூற்றண்டின் மிகப்பாரிய மனித பேரவலமான முள்ளிவாய்க்கால் படுகொலையில் முடிவுற்றது. இந்த படுகொலையில் பிரித்தானியவின் தனியார் இராணுவ நிறுவனங்களின் தொடர்புகள் பற்றிய விசாரணைகளை மெற்றோபொலிற்றன் போலீசார் ஆரம்பித்துள்ளனர்.
1975 இல் உருவாக்கப்பட்ட கீனி மீனி சேர்விஸ் (Keenie Meenie Services) பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாக மோதல்களில் ஈடுபடும் இடங்களுக்கு இராணுவ உதவியை வழங்கிய ஒரு தனியார் நிறுவனமாகும். . இலங்கையில் 1980 களில் விடுதலை புலிகளை எதிர்த்துப் போராடுவதற்காக இலங்கை காவல்துறையின் துணை ராணுவ சிறப்பு அதிரடிப் படைக்கு (Special Task Force – STF) கீனி மீனி நிறுவனம் பயிற்சி அளித்தது. தமிழ் பேசும் மக்கள் மீதான பல வன்முறைகளும் , படுகொலைகளும் இந்த சிறப்பு அதிரடிப்படையினரே நடாத்தினார்.
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் சுதந்திர கோரிக்கையை அடக்க முயன்ற போது, தமிழ் பொதுமக்கள் சிறப்பு அதிரடிப் படை மூலம் தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். 1987 ஆம் ஆண்டில் கொக்கட்டிச்சோலையிலுள்ள இறால் பண்ணையில் 85 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டது மிகவும் பயங்கரமான நினைவுகளில் ஒன்றாகும்.
புலனாய்வு பத்திரிகையாளரும் மற்றும் எழுத்தாளருமான பில் மில்லரின் (Phil Miller) தகவல் சுதந்திரக் கோரிக்கைகளின் விளைவாக வகைப்படுத்தப்பட்ட ஆவணங்கள் பயனளித்தன. பொதுமக்கள் மீது குண்டுவீச்சு நடத்துவதற்கும் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கும் கீனி மீனி சேர்விஸ் தனிப்பட்ட முறையில் ஈடுபட்டதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
2009 ல் போரின் இறுதி கட்டங்களில் பிரித்தானியாவிலுள்ள தமிழ் புலம்பெயர் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ய வீதிகளில் இறங்கி, முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்வதை தடுப்பதற்காக அப்போது ஆட்சியிலிருந்த கோல்டன் பிரவுனின் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்ததில் ஆச்சரியமில்லை. ஆனால் வலதுசாரி தொழிற்கட்சி அரசாங்கம் அன்று எதுவுமே செய்யவில்லை.
பிரித்தானிய அரசாங்கம் இலங்கை அரசுக்கு ஆயுதங்களை வழங்கியது மற்றும் பிரிட்டனில் உள்ள தமிழ் தொழிலாளர்கள் உட்பட தொழிலாள வர்க்கம் செலுத்திய வரிகள் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு நிதியளிக்கப்பட்டது. பாரிய மக்கள் அழுத்தத்திற்குப் பிறகு கீனி மீனி சேர்விஸ் நடத்திய போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து மெட்ரோபொலிட்டன் காவல்துறை விசாரணையைத் தொடங்கியது.
அந்த விசாரணை பொலிஸ் உளவாளிகளின் அடையாளங்களை வெளிப்படுத்த அனுமதிக்கவில்லை மற்றும் அவர்களின் புனைப் பெயர்களை கூட வெளிப்படுத்தவில்லை. பொலிஸ் உளவாளிகளால் பாதிக்கப்பட்டவரின் வாழ்க்கையும் இடதுசாரி அரசியல் அமைப்புக்களை தாக்குதலுக்குள்ளாக்கிய போது மனித உரிமைகள் அமைப்பு எங்கே போனது?
தொழிற்சங்கங்கள் மற்றும் தமிழ் புலம்பெயர்ந்தோர் உட்பட தொழிலாள வர்க்கத்தின் பிரதிநிதிகள் தலைமையிலான போர்க்குற்றங்களைச் செய்த பிரித்தானிய கூலிப்படையினருக்கு எதிராக ஒரு சுயாதீனமான பொது விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
மக்களின் வரிப்பணம் ஏகாதிபத்திய நலன்களை பாதுகாத்திட செய்யப்படும் போர்களுக்கு செலவிடப்படுகிறது, அனால் மக்களின் அடிப்படை வசதிகளான வீடு சுகாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு போன்ற வசதிகளை ஏற்படுத்த போதுமான பணம் இல்லை கை விரிகிறது இந்த அரசுகள். தொழிலாள வர்க்கம் கூட்டாக வளங்களை வைத்திருந்தால், அதை ஜனநாயக ரீதியாக கட்டுப்படுத்தினால், செலவினம் சமுதாயத்தை நோக்கியது என்பதை உறுதிசெய்ய முடியும் மற்றும் இது எந்த வகையிலும் முதலாளித்துவ வர்க்கத்தின் கட்டுபாட்டில் அவர்களின் தேவைகளுக்குமட்டுமல்லாது இருக்கும்.
[yotuwp type=”videos” id=”r98pL0VFN98″ ]