கொலைகார இலங்கை அரசின் 75 ஆண்டுகால அடக்குமுறைக்கு எதிராக தமிழ் சொலிடாரிடி . 

– லாவன்யா –

இலங்கையின் 75வது சுதந்திர தினமான பெப்ரவரி 4 அன்று, இலங்கையின் அடக்குமுறை ஆட்சியை எதிர்த்து, லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் தமிழ் சொலிடாரிட்டி போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தது. இந்த குளிர் காலநிலையில் 400க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏனைய புலம்பெயர் அமைப்புகளும் வெவ்வேறு நேரங்களில் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. 75 ஆண்டுகால அடக்குமுறை என்ற முழக்கத்துடன் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. எங்களின் ஒற்றுமை பொது மக்களுடன்தான்  – அரசு மற்றும் உயரடுக்குடன் அல்ல, எமது சுதந்திரத்திற்கான போராட்டம் தொடர்கிறது, நாங்கள் எங்கள் விடுதலையை  கோருகிறோம். ‘அரசியல் கைதிகளை விடுதலை செய், போராட்டம் நடத்தும் உரிமை பாதுகாக்கபடவேன்டும், சுயநிர்ணய உரிமை எமது உரிமை , ரணில் ராஜபக்ச வெளியேறு’ என மக்கள் கோஷமிட்டனர். “வெட்க்கம் இலங்கையில் மக்கள் பட்டினியால் சாகின்றார்கள் நீங்கள் ஆடம்பரமாக போலி சுதந்திரத்தை கொன்டாடுகின்றீர்கள்” உயர் ஸ்தானிகராலயத்தை நோக்கி   அனைவரும் கோஷமிட்ட போது, ​​எதிர்ப்பை திசைதிருப்பும் வகையில் மிகவும் சத்தமாக சிங்கள மொழியில் பாடல்களை சத்தமாக தூதரகத்தில் இருந்து ஒலிபரப்பட்டது வாசித்தனர். இது போராட்டக்கரர்களை கோபமடைய வைத்தது. தங்கள் கோபத்தை அவர்களிடம் காட்ட விரும்பினார், மேலும் அனைவரும் சேர்ந்து மிகவும் சத்தமாக கோஷமிட்டனர்.

இதே நேரம் இலங்கையில் வடக்கு, கிழக்கில் பல்கலை கழக மாணவர்கள்  பூரன கதவடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர். வடக்கிலிருந்து கிழக்குக்கான பேரனியும் ஆரம்பிக்கபட்டிருந்தது. “சுதந்திரம் எங்கே?” என்ற கோஷத்துடன் தெற்கிலும் போராட்டம்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த போது, ​​ரணில் ராஜபக்சவின் கும்பலால் போராட்டக்காரர் கொடூரமாக தாக்கப்பட்டார். போராட்டக்காரர்களில் சிலர் படுகாயமடைந்தனர். இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்குப் போராடினர். அதே சமயம் இலங்கையிலும் இங்கும் இந்த மேட்டுக்குடியினரும் அரசாங்கமும் சுதந்திர தினத்தை கொண்டாடினார்கள். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் சொலிடாரிட்டி கோரிக்கைகளை முன்வைத்தது. 

 • PTA ஐ உடனடியாக ரத்து செய்யுங்கள் -மற்றும் மற்ற அனைத்து அடக்குமுறை சட்டங்களையும்.
 • போராட்டக்காரர்கள் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் கைவிடுங்கள்.
 • அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்.
 •  ஒன்று கூடும் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து வேறுபாடு சுதந்திரம் ஆகியவற்றை அனுமதிக்கவும். 
 • காணாமல் போனவர்கள் எங்கே? அவர்கள் ஒவ்வொருவருக்கும் என்ன நடந்தது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். 
 • ராணுவம் மற்றும் அரசு அதிகாரிகள் ஆக்கிரமித்துள்ள அனைத்து நிலங்களையும் திரும்ப வழங்க வேண்டும். 
 • சுதந்திரமான போர்க்குற்ற விசாரணையை நாங்கள் கோருகிறோம்.
 •  மக்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஜனநாயக உரிமை ஆர்வலர்களைக் கொன்றவர்கள் மற்றும் கொலையாளிகளை தண்டிக்கப்பட வேண்டும். லசந்த விக்ரமதுங்கவின் கொலையாளிகள் ஏன் இன்னும் தலைமறைவாக உள்ளனர்? 
 • அனைத்து ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் பகுதிகளிலிருந்தும் படைகளை திரும்பப் பெறுங்கள். 
 • கல்வி மற்றும் சுகாதாரத்தில் தனியார்மயமாக்கலை நிறுத்த வேண்டும்.
 • தமிழ் பேசும்  மக்களின் சுயநிர்ணய உரிமையை அனுமதி.

புகைப்படங்கள்